Posts

Showing posts from August, 2022

விழுப்புரம்மாவட்டம்Work From Home இணையதளத்தில் வேலை தருவதாகபெண்ணிடம் மோசடி செய்த ரூபாய் 2 லட்சம் புகார்தாரருக்கு பெற்று தந்த சைபர்க்ரைம் காவல்துறையினர்

Image
  விழுப்புரம்மாவட்டம்கடந்த 3.5.2022 முதல் 8.5.2022 வரை ஆரோவில் பகுதியை சேர்ந்த பெண் அஞ்சு D/O தேவசியா என்பவர் Work From Home இணையத்தில் வேலை தேடுதல் தொடர்பாக தேடியதில் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடியதாகவும் இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்புகளில் இருந்து வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகும் இதனால் இவர் முன்பணமாக சிறிது சிறிதாக ரூபாய் 2 லட்சத்து 415 ரூபாய் Google pay மூலம் சம்பந்தப்பட்ட லிங்கில் இருந்து அனுப்பப்பட்ட அக்கவுண்டுகளுக்கு அனுப்பியதாகவும். ஆனால் இவர் வேலை செய்தும் சம்பளம் மற்றும் இவர் கட்டிய முன்பணம் திருப்பி தராததால் புகார் அளித்ததின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.ரவிசங்கர் மற்றும் காவலர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட இணையத்தில் விசாரணை செய்தும் புகார் பணம் அனுப்பிய அக்கவுண்டுகளை முடக்கம் செய்து அதில் இருந்து புகார்தாரர் அனுப்பிய இரண்டு லட்சத்து பணம் மீண்டும் புகார்தாரர் வங்கி கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டது. அதற்

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை சைபர்க்ரைம் காவல்குழுவினர் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த மாவட்ட SP.சுந்தரவதனம் IPS

Image
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில்  மாவட்ட காவல் அலுவலகத்தில் 30.08.2022  கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 131 க்கும் மேற்பட்ட  செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட  ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 க்கும் மேற்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து  சம்பந்தப்பட்ட நபர்களை 30.08.2022 நேரில் வரவழைத்து திருடுபோன செல்போன் மற்றும் பொருட்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருடுபோன பொருட்களை விரைவாக கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கீதாஞ்சலி அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.அம்சவேணி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.சுதர்சனன் மற்றும் காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் பாராட்டினார். மேலும் பொதுமக்கள் மொபைல் போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்களின் பணம் ரூபாய். 2 இலட்சத்து 46,100 ஒப்படைக்கப்பட்டது. சிறப்புநிருபர்.Kcm.சுரேஷ்.

கோவை மாவட்டம்தொடர்ந்து நான்காவது மாதமாக களவு போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

Image
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPSஅவர்கள்  (29.08.2022) ஆகஸ்ட் மாதத்தில் மாவட்டத்தில் காணாமல் மற்றும் களவு போன ரூ.16,50,000/- மதிப்புள்ள சுமார் 110 செல்போன்களை சைபர் க்ரைம் காவல்துறையினர் மூலம் கண்டுபிடித்து, அதன் உரிமையாளர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.  கடந்த  நான்கு மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் ரூபாய் 67,65, 000/-* மதிப்புள்ள சுமார் 451 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று வரும் காலங்களில் காணாமல் போன செல்போன்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் உறுதியளித்துள்ளார். நிருபர்.P.நடராஜ்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,15,73,850/- மதிப்புள்ள 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது

Image
 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் in ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. R.பொன்மீனா மற்றும் 3 சார்பு ஆய்வாளர்கள், 9 காவல் ஆளிநர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் காணமல் போன வழக்குகளின் புகார்களில் கடந்த ஒரு  மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலைய மூலம் ரூ- 7,10,000/- மதிப்புள்ள 50 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் IPS அவர்களால்  27.08.2022 ந் தேதி உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 1,15,73,850/- மதிப்புள்ள 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

Image
28.08.2022 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 08.07.2022 ம்தேதி  தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வில்வபதி (55)  மற்றும் வினோத்குமார் ஆகியோரை தொழில் விஷயமாக டெல்லிக்கு அழைத்து அவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஜீர்வானி பாபு (48), முகமது ஆசாத் (29), முகமது சந்த் (எ) சோனு (25) மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிப் ஹுசைன் (47), முகமது கரீம் (32) ஆகிய 05 நபர்களை திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் மேற்கண்ட 05 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், IAS அவர்கள் 05 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.  உத்தரவை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் ஜீர்வானி பாபு, முகமது ஆசாத், முகமது சந்த் (எ) சோனு, ஆசிப் ஹுசைன், முகமது கரீம் ஆகிய 05 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நிருபர்.P.சதீஷ்.

திருச்சி மாநகரில் விநாயகசதுர்த்திவிழாநடத்தும் அமைப்பாளர்களுடன் விழாபாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்.

Image
 திருச்சி மாநகரில் விநாயகசதுர்த்திவிழாநடத்தும் அமைப்பாளர்களுடன்   விழாபாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்.மாநர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்IPS . அவர்களின் தலைமையின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருண் ஹோட்டலில் 31.08.2022 ம் தேதி அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா & 02.09.2022 அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் & பிற மதத்தினரை சார்ந்த முக்கிய நபர்களுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  திருச்சி மாநகரத்தில் 02.09.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் காவேரி ஆற்றில் சிலை கரைப்பின் போது சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும், அமைதியான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைவைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் 02.09.22தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலத

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கூட்டுக்கொள்ளை மற்றும் நில மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கூட்டுக்கொள்ளை மற்றும் நில மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது  -  இந்த ஆண்டு இதுவரை 179 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் Dr. K. செந்தில் ராஜ் IAS அவர்கள் நடவடிக்கை. கடந்த 28.07.2022 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி வி.ஓ.சி நகர் பகுதியில் தூத்துக்குடி சாயர்புரம் பகுதியை சேர்ந்த தாமஸ் மகன் சிம்சன் (75) என்பவரை சொத்துப்பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரம் வெற்றிவேல் நகர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் (எ) ஸ்டீபன் (40) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான  முருகன் (எ) ஸ்டீபன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி அவர்களும், கடந்த 29.07.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுத

ஆந்திராவில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

Image
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக சரக                     DIG. கயல்விழி IPS அவர்களுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து,DIGஉத்தரவின்பேரில் ADSP.ஜெயச்சந்திரன் அவர்கள்மேர்பார்வையில் SI. டேவிட், SSI.கந்தசாமி,SSI.கண்ணன்,தலைமைகாவலர்.இளையராஜா,காவலர்கள்.    சுந்தர்ராமன்,ஆனந்தராஜ்,ஆகிய தனிப்படைகாவல்குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்   தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேராவூரணி அருகே பின்னவாசலில்  இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(40), தேனியைச் சேர்ந்த படையப்பா(24), பின்னவாசலை சேர்ந்த சிதம்பரம்(50) என்பதும், 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும், இதற்காக ஆந்திராவில் இருந்து லாரி ஒன்றில் 460 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, அதை சுமை ஆட்டோவில் மாற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லாரி, சுமை ஆட்டோ, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதேபோல, தஞ்சாவூர் ரயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே  இரவு ஒரு லாரியில்

திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு தடய அறிவியல் (Forensic Science) குறித்த பயிற்சி வகுப்பு

Image
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு தடய அறிவியல் சம்மந்தமான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  இப்பயிற்சி வகுப்பு பணியில் நன்கு தேர்ச்சி பெற்ற தடய அறிவியல் துறை  உதவி இயக்குநர் திரு. K. பாரி,(ஒய்வு) அவர்களால் பயிற்ச்சிவிக்கப்பட்டது.   இப்பயிற்சி வகுப்பில் குற்ற நிகழ்விடத்தில் அறிவியல் ரீதியாக புலனாய்வினை கையாள்வது பற்றியும், சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்து வரும்போது சந்தேக நபரிடம் விசாரணையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், தடயங்களை சம்பவ இடத்தில் இருந்து எவ்வாறு சேகரிப்பது என்பது பற்றியும்,  தடய அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான வழக்குகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. முக்கியமான வழக்குகளில் தடய அறிவியலை பயன்படுத்தி வழக்குகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எளிதில் தண்டனை பெற்றுத் தரவும், காவல் விதிமீறல்களை தவிர்க்கவும் (Custodial violence), தடய அறிவியல் பயன்படுகிறது. மேலும் சிறப்பாக பயிற்சி வித்த ஓய்வு பெற்ற  தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் திரு. K.  பாரி, அவர்களை திருநெல்வேலி மாவட

வாணியம்பாடி காவல் சர்கத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காண பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

Image
   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காவல் சர்கத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காண பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாமல் சிறப்பான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், காவல் ஆய்வாளர்கள் பழனி, நாகராஜ், அருண்குமார், செல்லபாண்டியன், ஜெயலட்சுமி, தமிழரசி, சாந்தி, மற்றும் வாணியம்பாடி காவல் சரக்கத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். நிருபர்.முகமதுயூனுஸ்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள்

Image
காஞ்சிபுரம் முசறவாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் 14.08.2022 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10th South Indian level Karate & Kuig-fu open championship போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு Dr.M.சுதாகர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் இது போன்று மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும், தற்காப்பு கலைகளை நன்கு  கற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு மற்றும் கராத்தே பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் முரளி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். சிறப்புநிருபர்.ம.சசி

கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவன் - DGP அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்

Image
14.08.2022-ம் தேதி சென்னை, மெரினா  கடற்கரையில் அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு,  IPS., அவர்கள், 16.08.2022 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தார்.  இந்நிலையில்  பூரண குணம் அடைந்த சிறுவன் முகேஷ் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறுவன் தனது குடும்பத்தினருடன் DGP அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.  இனி நல்லபடியாக பள்ளிக்கு செல்ல உள்ளதாக முகேஷ் கூறியதை கேட்டு DGP.Dr.C.சைலேந்திரபாபு IPSஅவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். துணைஆசிரியர்.B.சம்பத்.

பெண்கள் போல் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்கி பலரை ஏமாற்றிய நபரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

Image
 திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த ஜெகன் (29) என்பவர் தன்னை சமூக வலைதளத்தில் பெண் போல நடித்து மனுதாரரின் புகைப்படத்தை மார்பிஃங் செய்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்கள் போல் போலியான கணக்கு தொடங்கி அதை வைத்து பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரை ஏமாற்றியும் மேலும் ஜெகன் என்பவரை ஏமாற்றிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜா (26) என்பவரை திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். நிருபர்.T.V.அனந்தகுமார்.

திருநெல்வேலி மாவட்ட CCTNS காவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

Image
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணி புரியும் CCTNS (Crime and Criminal Tracking Network System) காவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 22.08.22 ம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS. அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.  அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNS காவலர்கள் என ஒருவர் நியமிக்கப்பட்டு, காவல் நிலையங்களில்        பதியப்படும்   குற்ற வழக்குகள் மற்றும் வழக்குகளின் சம்பந்தப்பட்ட எதிரிகளின் புகைப்படம் ஆகியவை CCTNS காவலர்கள் மூலம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரப்படுகிறது. மேலும் சந்தேக எதிரிகள்  மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன் வழக்குகள் உள்ளதா என வலைதளத்தில் தணிக்கை செய்வதும் மேற்படி காவலர்களின் முக்கிய பணியாகும்.  மேற்படி காவலர்களின் பணி காவல் நிலையங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் காலதாமதம் இன்றி CCTNS ல் பதிவேற்றம் செய்யவும், விபத்து வழக்குகளின் ஆவணங்கள் உடனடியாக CCTNS வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும், மேலும்

தஞ்சாவூர்மாவட்டம் அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

Image
.தஞ்சாவூர்மாவட்டம் அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்  அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்களில் சிலருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா விரைவில் கிடைத்து விடும். ஆனால் சிலருக்கோ இந்த வீட்டுமனைப்பட்டாவானது 2 அல்லது 3 தலைமுறைகளுக்கு பிறகு தான் கிடைக்கிறது. அப்படி 3 தலைமுறைகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த குடும்பத்தினருக்கு தற்போது இலவச வீட்டுமனைப்பட்டா கிடைத்து இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:- தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி வள்ளுவர்தெரு பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த இடத்தில் தான் வசித்து வருகின்றனர்.  அரசு புறம்போக்கு இடத்தில் மண் சுவரால் ஆன குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு பட்டா இல்லாத காரணத்தினால் அரசு மானியத்தின் மூலம் கான்கிரீட் வீடு கட்டக்கூட முடியாமல் தவித்து வந்தனர். இவர்கள் அனைவரும் கூடை மற

வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கு தொடர்பாக 4 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர்

Image
.  நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது 40). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த 17-ந் தேதி இரவு வேளாங்கண்ணி முச்சந்தியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த மனோகரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். 4 பேர் கோர்ட்டில் சரண் இந்த கொலை வழக்கு தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.  இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாகை மாவட்டம் பறவை பொய்கைநல்லூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன்(வயது 35), நாகராஜன் மகன் விஜய்(26), ரமேஷ்குமார் என்கிற சேட்டு ரமேஷ்(40), ரெத்தினசாமி மகன் அருள்அரசன் (22) ஆகிய 4 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் 4 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஹரிராம் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவையாறு போலீசார், 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நிருபர். சக்திவேல்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் 2265 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தநபர் கைது.

Image
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்கள் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள்களை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்  அடிப்படையில்  (22.08.2022) பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்உதவி ஆய்வாளர் திரு. ஜெயபிரகாஷ், காவலர்கள் PC1875திரு. பாலசுப்பிரமணி, PC1169திரு. முத்தமிழரசன்,PC 1884 திரு. வீரமணி ஆகியோர்களுடன் மத்தம்பாளையம் ரோடு தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அவ்வழியாக வந்த சேரன் நகரை சேர்ந்த முகமது என்பவரது மகன் அப்பாஸ்(43) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே அப்பாஸ்-ஐ கைது செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் -1352கிலோ, கூல் லிப்-161கிலோ, விமல் பான் மசாலா-468கிலோ,வி1 மசாலா-100கிலோ, ஸ்வாகத் கோல்ட்-96கிலோ, கணேஷ்-38கிலோ,  ஆர்எம்ட

தஞ்சாவூரில் ரூ.12½ கோடி மதிப்பிலான ஆக்கிரப்பு இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி ஆணையர்.

Image
 தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.12½ கோடி மதிப்பிலான இடத்தை கையப்படுத்தியதோடு, ஆக்கிரமிப்பாளர்கள் 16 பேருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டு அறிவிப்பும் செய்யப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. இவற்றை தஞ்சை மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் கண்டறிந்து அதனை அகற்றி கையகப்படுத்தி வருகிறார். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே பாலத்தின் வலதுபுறம் பகுதியில் அகழிகரையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை 16 பேர் ஆக்கிரமித்து கட்டிடங்களை பலதலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.  16 பேருக்கு நோட்டீசு* இந்த இடத்தில் ஜவுளிக்கடை, ஓட்டல், டீக்கடை, பாத்திரக்கடை, பாலீஸ் பட்டறை உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. வீடுகளும் இதில் உள்ளன. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி வலி

தேனிமாவட்டம் 24 மணி நேரத்திற்குள் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை பிடித்த முதல் நிலை காவலருக்கு குவியும் பாராட்டு

Image
  தேனிமாவட்டம்  உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் லாரி ஓட்டுநரை அச்சுறுத்தி அவர் வைத்திருந்த ரூபாய் 10,000 மதிப்புள்ள தொலைபேசி மற்றும் ரூபாய் 8000 பணத்தை பறித்து  சென்று விட்டனர். லாரி ஓட்டுனர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையில்  குற்றவாளிகளை தேடப்பட்டு வந்த நிலையில் முதல் நிலை காவலர் திரு.S.சுந்தர்-973  விரைந்து  செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை துரிதமாக 24 மணி நேரத்திற்கு மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தார். குற்றவாளியை விரைவாக பிடித்த முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் IPS அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். நிருபர்.பரமசிவம்.

தூத்துக்குடிமாவட்டத்தில் காவல்துறையினரின்வாரிசுகள் அதிகமதிப்பெண்பெற்றமாணவர்களுக்கு கல்விஉதவிதொகைவழங்கிய SP.

Image
  மேல்நிலைப்பள்ளி படிப்பில் 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கு 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும். அதன்படி 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை மூன்றாவது மற்றும் நான்காவது தவணையாக  (16.08.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார். இந்த கல்வி உதவி தவணைத் தொகை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர் விஜய

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு-காவல்துறைசார்பாக பள்ளி கல்லூரிமாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி .

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரிலும்,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி (11.08.2022) நடத்தப்பட்டது. கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் Dr.. முத்துசாமி, IPS அவர்கள் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SNS பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடனும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்கள் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுடனும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுக்கு போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். போதையை பின்தொடர்ந்தால் வாழ்க்கையின் பாதை மாறிவிடும்...  போதையோடு "கை" குலுக்காதீர்... வாழ்க்"கை" போய்விடும்....  போதை ஒழியட்டும்...  வாழ்க்கை மிளிரட்டும்... கோவைமாவட்டகாவல்துறை. நிருபர்.P.நடராஜ்.

அரசால்தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் கள்ளமதுபாட்டில் கடத்தி விற்ப்பனைசெய்த வாலிபர் கைது தஞ்சாவூர் தனிபடை காவல்துறையினர் அதிரடி

Image
 .  தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் மாவட்ட                       SP. ரவளிபிரியா IPS உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் தஞ்சை கரந்தை பகுதியில் ஒரு வீட்டில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு, மாநகரில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் தலைமைகாவலர்கள்  உமாசங்கர், ராஜேஷ், காவலர்கள் அருள்மொழிவர்மன், அழகுநவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கரந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கரந்தை கொடிக்காரதெருவில் உள்ள ஒரு வீட்டில் தான் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்குள் தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு

திருப்பூர்மாநகரில்12, மணி நேரத்தில்கொள்ளையடிக்கபட்ட பணம், நகைகள்,மீட்பு குற்றவாளிகள் கைது -காவல்குழுவினருக்கு DGP. பாராட்டு.

Image
  திருப்பூர் மாநகரம், சோளிபாளையம் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரை கொலை செய்து வீட்டில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார் பத்து லட்சம் திருடப்பட்ட தகவல் கிடைத்தவுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.திரு.பிரபாகரன்,IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் திரு.அபினவ் குமார், IPS ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டும், எதிரிகளைக் கண்டறிய கொங்கு நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.அனில்குமார் மற்றும் அனுப்பர்பாளையம் சரக  காவல் உதவி ஆணையர் திரு.நல்லசிவம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டதில், மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளையும் மற்றும் ரூ. 9,82,000 பணம் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினர் அனைவரையும் காவல்துறை தலைமை இயக்குநர் DGP. C.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார்கள். சிறப்புநிருபர்.Kcm.சுரேஷ்.

தஞ்சாவூர்மாவட்டம்- ஆந்திராவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை DIG கயல்விழிIPS பாராட்டினார்.

Image
கும்பகோணம்; ஆந்திராவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார். தீவிர கண்காணிப்பு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனைகளை முற்றிலும் தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் தஞ்சை சரக DIG. கயல்விழி IPS உத்தரவு பிறப்பித்தார்.  அதன்படி 4 மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டு இளையராஜா, போலீஸ்காரர்கள் சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். காரில் கஞ்சா கடத்தல். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த

கோவை மாவட்டம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விருதினைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS அவர்கள்.

Image
  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா  (06.08.2022) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது போன்றவற்றிற்காக மாநில மனித உரிமைகள் ஆணையம் சிறந்த முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை தேர்வு செய்தது. இதில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் சிறந்த காவல்அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, அவ்விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வழங்கினார்கள்.என்பது குறிப்பிடதக்கது. Reporter.P.Nataraj.

கோவை மாவட்டத்தில் பள்ளிமாணவ மாணவிகளுக்கு பாலியல்சம்மந்தமான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்ராஜெக்ட் பள்ளிகூடம் திட்டத்தில் சிறப்பாகசெயல்படும் காவல்துறையினருக்கு.SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு.

Image
  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS அவர்களால்  குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் பிரச்சனை சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கமே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்த ஒரு குழந்தையும் பாலியல் குற்றத்திற்கு உள்ளாகக் கூடாது என்பதும், குழந்தைகளுக்கு எதிரான எந்த குற்றமும் நடவாமல் தடுப்பதுமே ஆகும். மேலும் இத்திட்டத்தின் மூலம் கடந்த ஒரு மாதத்தில்   513 பள்ளிகளில்  பயிலும் சுமார் 58,000 குழந்தைகளுக்கு கோவை மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.  இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த (ஜூலை) மாதத்தில் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் 3 காவல் ஆளிநர்களை தேர்வு செய்து,

கடலூர்மாவட்டகாவல்துறையினர் பொதுமக்களுக்கு போதைபொருட்கள் உபயோகத்தினால் ஏற்ப்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தினர்.

Image
கடலூர் மாவட்டம்காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திக ணேசன் IPS அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்கள் முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள் , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தங்களது காவல் சரகத்திற்கு உட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வழங்கிய அறிவுரையின்பேரில்  கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிபுலியூர் , புதுப்பேட்டை , சிதம்பரம் , பரங்கிப்பேட்டை , புவனகிரி , கிள்ளை , வடலூர் , விருத்தாச்சலம் , கம்மாபுரம் , பெண்ணாடம் , திட்டக்குடி , மந்தாரக்குப்பம் , ஸ்ரீமுஷ்ணம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் காவல் அதிகாரிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . கஞ்சா , குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கபடுவதோடு , பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் கடல் வளத்தை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம்.ஆட்சியர்.தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் IAS அறிவிப்பு

Image
 தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் கடல் வளத்தை பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது. அலையாத்தி காடுகள், கடலின் முகத்துவாரங்களில் இருக்கும். ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள். கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலையாத்தி காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அலையாத்தி காடுகள் என்பவை கடலோர உப்பு தன்மையை தாங்கும் திறன் கொண்ட தாவரங்களாகும். தஞ்சை மாவட்டத்தில் வெண்கண்டல், சுரபுன்னை, தில்லை, தீப்பரத்தை ஆகிய 4 வகை அலையாத்தி மர வகைகள் உள்ளன. இயற்கையாக ஆற்று கழிமுக துவாரங்களில் இவை வளர்ந்து உள்ளன. இவை கஜா புயல் வீசியபோது அங்குள்ள மக்களை பாதுகாத்துள்ளன.  எனினும் அலையாத்தி காடுகளின் ஒரு பகுதி கஜா புயலின்போது சேதமடைந்தன. கடல் வளம் பாதுகாப்பு மேலும் அலையாத்தி காடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை இழுத்து பூமியில் சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியமாகிறது. தஞ்சை மாவட்டத்தில் மீன், நண்டு மற்றும் இறால் போன்றவை இயற்கையாக உற்பத்தியாகி, மீனவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக

கோவை மாவட்டம்பெண் காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டிய SP.பத்ரிநாராயணன் IPS

Image
  \ கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் திருமதி. ஆமினா அவர்கள் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத 100-க்கும் மேற்பட்ட பிரேதங்களை முன்னிருந்து முறையாக இறுதிசடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார். இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.08.2022) அவரைநேரில்அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். நிருபர்.P.நடராஜ்.

தூத்துக்குடிமாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுதொகைபெற்றுதந்த SP.Dr.பாலாஜிசரவணன்

Image
. தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு இழப்பீட்டு தொகையாக (Victim Compensation Fund) தமிழக அரசு ரூபாய் 8,17,000/-ம் வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு   (29.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார். இதில் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் ரவிக்குமார் என்பவரை எதிரிகள் கொலை செய்த வழக்கு, புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதி மகன் மோகன் என்பவரை எதிரிகள் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 14 குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.நிருபர்.அய்யப்பன்.