தேனிமாவட்டம் 24 மணி நேரத்திற்குள் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை பிடித்த முதல் நிலை காவலருக்கு குவியும் பாராட்டு



  தேனிமாவட்டம்  உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் லாரி ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் லாரி ஓட்டுநரை அச்சுறுத்தி அவர் வைத்திருந்த ரூபாய் 10,000 மதிப்புள்ள தொலைபேசி மற்றும் ரூபாய் 8000 பணத்தை பறித்து  சென்று விட்டனர். லாரி ஓட்டுனர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையில்  குற்றவாளிகளை தேடப்பட்டு வந்த நிலையில் முதல் நிலை காவலர் திரு.S.சுந்தர்-973  விரைந்து  செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை துரிதமாக 24 மணி நேரத்திற்கு மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தார்.

குற்றவாளியை விரைவாக பிடித்த முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் IPS அவர்கள் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நிருபர்.பரமசிவம்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.