திருநெல்வேலி மாவட்ட CCTNS காவலர்களுக்கான ஆய்வு கூட்டம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணி புரியும் CCTNS (Crime and Criminal Tracking Network System) காவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 22.08.22 ம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. சரவணன் IPS. அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.  அனைத்து காவல் நிலையங்களிலும் CCTNS காவலர்கள் என ஒருவர் நியமிக்கப்பட்டு, காவல் நிலையங்களில்        பதியப்படும்

 



குற்ற வழக்குகள் மற்றும் வழக்குகளின் சம்பந்தப்பட்ட எதிரிகளின் புகைப்படம் ஆகியவை CCTNS காவலர்கள் மூலம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரப்படுகிறது. மேலும் சந்தேக எதிரிகள்  மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன் வழக்குகள் உள்ளதா என வலைதளத்தில் தணிக்கை செய்வதும் மேற்படி காவலர்களின் முக்கிய பணியாகும்.  மேற்படி காவலர்களின் பணி காவல் நிலையங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் காலதாமதம் இன்றி CCTNS ல் பதிவேற்றம் செய்யவும், விபத்து வழக்குகளின் ஆவணங்கள் உடனடியாக CCTNS வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும், மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து CCTNS ல் முடிக்கவும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் சந்தேக நபர்களை கண்காணிப்பதற்காக FRS Application பயன்படுத்தி சந்தேக நபர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு முன் வழக்குகள் உள்ளதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. 

மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில், காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் CCTNS வலைதளத்தில் பதிவேற்றம்  செய்யப்படுவதால் புகார்தாரர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை காலதாமதம் இன்றி சிட்டிசன் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு விரைவில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் CCTNS ல் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களான கூடங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ராதாகிருஷ்ணன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் திரு. உன்னிகிருஷ்ணன் மற்றும் அம்பை காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. பிச்சம்மாள் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

Chief Reporter.SHANMUGANATHAN.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.