வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கு தொடர்பாக 4 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர்

.


 நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது 40). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த 17-ந் தேதி இரவு வேளாங்கண்ணி முச்சந்தியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த மனோகரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். 4 பேர் கோர்ட்டில் சரண் இந்த கொலை வழக்கு தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாகை மாவட்டம் பறவை பொய்கைநல்லூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன்(வயது 35), நாகராஜன் மகன் விஜய்(26), ரமேஷ்குமார் என்கிற சேட்டு ரமேஷ்(40), ரெத்தினசாமி மகன் அருள்அரசன் (22) ஆகிய 4 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் 4 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஹரிராம் உத்தரவிட்டார். அதன்பேரில் திருவையாறு போலீசார், 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நிருபர். சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.