தூத்துக்குடிமாவட்டத்தில் காவல்துறையினரின்வாரிசுகள் அதிகமதிப்பெண்பெற்றமாணவர்களுக்கு கல்விஉதவிதொகைவழங்கிய SP.

 

மேல்நிலைப்பள்ளி படிப்பில் 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளுக்கு 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார்.


தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும். அதன்படி 2020 - 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை மூன்றாவது மற்றும் நான்காவது தவணையாக  (16.08.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார்.


இந்த கல்வி உதவி தவணைத் தொகை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மகள் சபரிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மகள் சிதம்பர செல்வி, மாவட்ட அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மகன் ஆதி பிரகாஷ் மற்றும் பெண் தலைமை காவலர் முத்துராக்கு மகன் கார்த்திக்ராஜா ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.

 இந்நிகழ்வின்போது காவல்துறை அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், தகவல் பதிவு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிருபர்.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.