கடலூர்மாவட்டகாவல்துறையினர் பொதுமக்களுக்கு போதைபொருட்கள் உபயோகத்தினால் ஏற்ப்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தினர்.



கடலூர் மாவட்டம்காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திக ணேசன் IPS அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்கள் முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள் , காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தங்களது காவல் சரகத்திற்கு உட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வழங்கிய அறிவுரையின்பேரில்

 கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிபுலியூர் , புதுப்பேட்டை , சிதம்பரம் , பரங்கிப்பேட்டை , புவனகிரி , கிள்ளை , வடலூர் , விருத்தாச்சலம் , கம்மாபுரம் , பெண்ணாடம் , திட்டக்குடி , மந்தாரக்குப்பம் , ஸ்ரீமுஷ்ணம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் காவல் அதிகாரிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . கஞ்சா , குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கபடுவதோடு , பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .

சிறப்பு நிருபர்.P.முத்துகுமரன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.