கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு-காவல்துறைசார்பாக பள்ளி கல்லூரிமாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி .



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரிலும்,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி (11.08.2022) நடத்தப்பட்டது.

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் Dr.. முத்துசாமி, IPS அவர்கள் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SNS பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடனும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்கள் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேரு கல்லூரியில் பயிலும் மாணவர்களுடனும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வில் பங்கேற்று, மாணவர்களுக்கு போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


போதையை பின்தொடர்ந்தால் வாழ்க்கையின் பாதை மாறிவிடும்... 

போதையோடு "கை" குலுக்காதீர்... வாழ்க்"கை" போய்விடும்.... 

போதை ஒழியட்டும்... 

வாழ்க்கை மிளிரட்டும்... கோவைமாவட்டகாவல்துறை.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.