ஆந்திராவில் இருந்து லாரிகளில் கடத்தி வரப்பட்ட 588 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக சரக                     DIG. கயல்விழி IPS அவர்களுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து,DIGஉத்தரவின்பேரில் ADSP.ஜெயச்சந்திரன் அவர்கள்மேர்பார்வையில் SI. டேவிட், SSI.கந்தசாமி,SSI.கண்ணன்,தலைமைகாவலர்.இளையராஜா,காவலர்கள்.    சுந்தர்ராமன்,ஆனந்தராஜ்,ஆகிய தனிப்படைகாவல்குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்   தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பேராவூரணி அருகே பின்னவாசலில்  இரவு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார்(40), தேனியைச் சேர்ந்த படையப்பா(24), பின்னவாசலை சேர்ந்த சிதம்பரம்(50) என்பதும், 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும், இதற்காக ஆந்திராவில் இருந்து லாரி ஒன்றில் 460 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, அதை சுமை ஆட்டோவில் மாற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, லாரி, சுமை ஆட்டோ, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூர் ரயில்வே குட்ஷெட் எடை மேடை அருகே  இரவு ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சிலர் பொட்டலங்களை ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற தனிப்படை போலீஸாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், அங்கிருந்த 5 பேரை மடக்கிப் பிடித்து, லாரிகளில் சோதனை செய்தபோது, அதில், 128 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பிடிபட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், திருபுவனம் அசாருதீன்(19), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஆசிப்ராஜா(25), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சதாம்உசேன்(30), புதுகொத்தைகாட்டைச் சேர்ந்த மாணிக்கராஜ் (37), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய்(41) ஆகியோர் என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 2 லாரிகள், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், 5 பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரைதனிப்படை காவல்குழுவினர் தேடி வருகின்றனர்.

நிருபர்.R.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.