திருப்பூர்மாநகரில்12, மணி நேரத்தில்கொள்ளையடிக்கபட்ட பணம், நகைகள்,மீட்பு குற்றவாளிகள் கைது -காவல்குழுவினருக்கு DGP. பாராட்டு.

 

திருப்பூர் மாநகரம், சோளிபாளையம் கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரை கொலை செய்து வீட்டில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார் பத்து லட்சம் திருடப்பட்ட தகவல் கிடைத்தவுடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.திரு.பிரபாகரன்,IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் திரு.அபினவ் குமார், IPS ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டும், எதிரிகளைக் கண்டறிய கொங்கு நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு.அனில்குமார் மற்றும் அனுப்பர்பாளையம் சரக  காவல் உதவி ஆணையர் திரு.நல்லசிவம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டதில், மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளையும் மற்றும் ரூ. 9,82,000 பணம் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினர் அனைவரையும் காவல்துறை தலைமை இயக்குநர் DGP. C.சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார்கள்.

சிறப்புநிருபர்.Kcm.சுரேஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.