பெண்கள் போல் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்கி பலரை ஏமாற்றிய நபரை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்


 திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த ஜெகன் (29) என்பவர் தன்னை சமூக வலைதளத்தில் பெண் போல நடித்து மனுதாரரின் புகைப்படத்தை மார்பிஃங் செய்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்கள் போல் போலியான கணக்கு தொடங்கி அதை வைத்து பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரை ஏமாற்றியும் மேலும் ஜெகன் என்பவரை ஏமாற்றிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜா (26) என்பவரை திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

நிருபர்.T.V.அனந்தகுமார்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.