தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.


28.08.2022 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 08.07.2022 ம்தேதி  தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வில்வபதி (55)  மற்றும் வினோத்குமார் ஆகியோரை தொழில் விஷயமாக டெல்லிக்கு அழைத்து அவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஜீர்வானி பாபு (48), முகமது ஆசாத் (29), முகமது சந்த் (எ) சோனு (25) மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிப் ஹுசைன் (47), முகமது கரீம் (32) ஆகிய 05 நபர்களை திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில் மேற்கண்ட 05 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், IAS அவர்கள் 05 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

உத்தரவை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் ஜீர்வானி பாபு, முகமது ஆசாத், முகமது சந்த் (எ) சோனு, ஆசிப் ஹுசைன், முகமது கரீம் ஆகிய 05 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிருபர்.P.சதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.