கோவை மாவட்டத்தில் பள்ளிமாணவ மாணவிகளுக்கு பாலியல்சம்மந்தமான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்ராஜெக்ட் பள்ளிகூடம் திட்டத்தில் சிறப்பாகசெயல்படும் காவல்துறையினருக்கு.SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு.

 


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS அவர்களால்  குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் பிரச்சனை சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் நோக்கமே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்த ஒரு குழந்தையும் பாலியல் குற்றத்திற்கு உள்ளாகக் கூடாது என்பதும், குழந்தைகளுக்கு எதிரான எந்த குற்றமும் நடவாமல் தடுப்பதுமே ஆகும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் கடந்த ஒரு மாதத்தில்   513 பள்ளிகளில்  பயிலும் சுமார் 58,000 குழந்தைகளுக்கு கோவை மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். 

இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த (ஜூலை) மாதத்தில் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் 3 காவல் ஆளிநர்களை தேர்வு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  (04.08.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில்  பெண் காவலர்கள் கௌசல்யா ,

 பிரேமா, மற்றும் முத்துவள்ளி, ஆகியோர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்ற காவல் ஆளிநர்களையும் ஊக்குவிக்க ஒரு உந்து கோலாக அமைந்துள்ளது.

மேலும் இத்திட்டத்தின் எதிரொலியாக பல குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சம்மந்தமான குற்றங்களில் இருந்து விழித்துக் கொண்டும், அதிலிருந்து வெளிவந்து தைரியமாக காவல் துறையினரிடமும் புகார் தெரிவிக்கின்றனர்.

" ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் நோக்கத்தை குழந்தைகளிடம் எடுத்துரைப்போம் "

" பாலியல் குற்றமில்லா மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவோம் "

நிருபர்கள்.R.கோவிந்தசாமி,P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.