கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் 2265 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்... விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தநபர் கைது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்கள் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள்களை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்  அடிப்படையில்  (22.08.2022) பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்உதவி ஆய்வாளர் திரு. ஜெயபிரகாஷ், காவலர்கள் PC1875திரு. பாலசுப்பிரமணி, PC1169திரு. முத்தமிழரசன்,PC 1884 திரு. வீரமணி ஆகியோர்களுடன் மத்தம்பாளையம் ரோடு தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அவ்வழியாக வந்த சேரன் நகரை சேர்ந்த முகமது என்பவரது மகன் அப்பாஸ்(43) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே அப்பாஸ்-ஐ கைது செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் -1352கிலோ, கூல் லிப்-161கிலோ, விமல் பான் மசாலா-468கிலோ,வி1 மசாலா-100கிலோ, ஸ்வாகத் கோல்ட்-96கிலோ, கணேஷ்-38கிலோ,

 ஆர்எம்டி பான் மசாலா-36கிலோ மற்றும் எம் கோல்டு-14 கிலோ எடையுள்ள சுமார் ரூ. .35,00,000/- மதிப்புள்ள மொத்தம் 2265 கிலோ புகையிலை பொருட்கள்,நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை* பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு பகுதியில் உள்ள சிறு மற்றும் பெரிய கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து சமூக சீர்கேடு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம்* மற்றும் காவல் ஆய்வாளர் திரு. தாமோதரன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு.பத்ரிநாராயணன் IPS. அவர்கள் எச்சரித்துள்ளார்.

நிருபர்கள்.R.கோவிந்தசாமி,P.நடராஜன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.