திருநெல்வேலி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு தடய அறிவியல் (Forensic Science) குறித்த பயிற்சி வகுப்பு



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு தடய அறிவியல் சம்மந்தமான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  இப்பயிற்சி வகுப்பு பணியில் நன்கு தேர்ச்சி பெற்ற தடய அறிவியல் துறை  உதவி இயக்குநர் திரு. K. பாரி,(ஒய்வு) அவர்களால் பயிற்ச்சிவிக்கப்பட்டது. 




 இப்பயிற்சி வகுப்பில் குற்ற நிகழ்விடத்தில் அறிவியல் ரீதியாக புலனாய்வினை கையாள்வது பற்றியும், சந்தேக நபரை விசாரணைக்கு அழைத்து வரும்போது சந்தேக நபரிடம் விசாரணையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், தடயங்களை சம்பவ இடத்தில் இருந்து எவ்வாறு சேகரிப்பது என்பது பற்றியும்,  தடய அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான வழக்குகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. முக்கியமான வழக்குகளில் தடய அறிவியலை பயன்படுத்தி வழக்குகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எளிதில் தண்டனை பெற்றுத் தரவும், காவல் விதிமீறல்களை தவிர்க்கவும் (Custodial violence), தடய அறிவியல் பயன்படுகிறது.

மேலும் சிறப்பாக பயிற்சி வித்த ஓய்வு பெற்ற  தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் திரு. K.  பாரி, அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் SP.P.சரவணன் IPS பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.