தஞ்சாவூர்மாவட்டம்- ஆந்திராவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை DIG கயல்விழிIPS பாராட்டினார்.



கும்பகோணம்; ஆந்திராவில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார். தீவிர கண்காணிப்பு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனைகளை முற்றிலும் தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் தஞ்சை சரக DIG. கயல்விழி IPS உத்தரவு பிறப்பித்தார். 

அதன்படி 4 மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன், ஏட்டு இளையராஜா, போலீஸ்காரர்கள் சுந்தர்ராமன், ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். காரில் கஞ்சா கடத்தல். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.காரில் இருந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்தபோது ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் பாதியை வைத்து விட்டு, 16 கிலோ கஞ்சாவை கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் வழங்குவதற்காக காரில் எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் 6 பேர் காரில் வந்ததும், 2 பேர் கஞ்சா பொட்டலத்துடன் பஸ்சில் புறப்பட்டு திருவிடைமருதூருக்கு சென்றதும், 2 பேர் தப்பி சென்றதும் தெரியவந்தது. 4 பேர் கைது இதைத்தொடர்ந்து கஞ்சா கடத்தில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த சிவா(வயது 22), கீர்த்தி(26), பிரசன்னா(27), வாசன்(19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைதான 4 பேரும் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படையினரை தஞ்சை சரக DIG. கயல்விழி IPS பாராட்டினார்.

நிருபர்.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.