கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை சைபர்க்ரைம் காவல்குழுவினர் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த மாவட்ட SP.சுந்தரவதனம் IPS



கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில்  மாவட்ட காவல் அலுவலகத்தில் 30.08.2022  கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 131 க்கும் மேற்பட்ட  செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட  ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 க்கும் மேற்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து  சம்பந்தப்பட்ட நபர்களை 30.08.2022 நேரில் வரவழைத்து திருடுபோன செல்போன் மற்றும் பொருட்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருடுபோன பொருட்களை விரைவாக கண்டுபிடித்து சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கீதாஞ்சலி அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.அம்சவேணி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு.சுதர்சனன் மற்றும் காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் பாராட்டினார்.

மேலும் பொதுமக்கள் மொபைல் போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்களின் பணம் ரூபாய். 2 இலட்சத்து 46,100 ஒப்படைக்கப்பட்டது.

சிறப்புநிருபர்.Kcm.சுரேஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.