Posts

Showing posts from July, 2022

உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்-2022 முன்னிட்டு திருச்சி பகுதியில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியில் உலக ஆட்கடத்தல்,தடுப்புவிழிப்புணர்வுநிகழ்ச்சிகாவல்ஆய்வாளர் அஜிம் விழிப்புணர்வு உரை

Image
உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்-2022 முன்னிட்டு திருச்சி பகுதியில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியில் உலக ஆட்கடத்தல்,தடுப்புவிழிப்புணர்வுநிகழ்ச்சி. பெண்கள் குழந்தைகளுக்கான வன்முறையை தடுக்கும் பொருட்டு கல்லூரி அளவில் உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு குழு உருவாக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருமிகு P.அஜீம் காவல் ஆய்வாளர், குழந்தை மற்றும் மனித கடத்தல், திருச்சி மாநகரம் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்  தற்போது பெருகிவரும் புதிய தொழில் நுட்பம் மூலம் நடைபெறும் தவறுகள் அதில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக பேசினார் . பின்னர் இக்குழுவை வழிநடத்த மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) மற்றும் காவேரி மகளிர் கல்லுரி இருவருக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முடிவில் ஆட்கடத்தல் பற்றிய குறும்படம் மூலம் மாணவர்களுக்கு விளக்கி காண்பிக்கபட்டது.  தலைமைநிருபர்.நா.ராக்கேஷ்சுப்ரமணி.

காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: கோவில்பட்டி புதிய துணைகாவல்கண்காணிப்பாளர் DSP.K.வெங்கடேஷ்.

Image
கோவில்பட்டி பகுதியில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கோவில்பட்டி புதிய.DSP.யாக பொறுப்பு ஏற்றுள்ள கே.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த உதயசூரியன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடம் கடந்த 3 மாதங்களாக காலியாகவே இருந்தது. மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் 2 மாதத்திற்கு மேலாகவும், தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பு சில நாள்களாகவும் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தனர். இந்நிலையில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக கே.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் வியாழக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, கோவில

"விபத்தில்லா சாலை பயணம்" என்ற தலைப்பில் 5 கிராமங்களில் அரியலூர்மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Image
திருச்சி சரக  காவல் துறை துணைத் தலைவர் திரு.A. சரவண சுந்தர் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் (பொறுப்பு) அவர்களின் அறிவுரையின்படி அரியலூரில் இருந்து திருமானூர் செல்லும் சாலையில் உள்ள ஐந்து கிராமங்களான வாரணவாசி, சமத்துவபுரம், காந்தி நகர், திடீர் குப்பம், மற்றும் கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் இன்று 24.07.2022  அந்தந்த கிராமங்களில் "விபத்தில்லா சாலை பயணம்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தலைக்கவசத்தின் முக்கியத்துவம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தினால் குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும்  எடுத்துரைக்கப்பட்டது. அரியலூர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் கலந்து கொண

உலகின் மிக நீண்ட பாய்மரப் படகு பயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபுIPS

Image
தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன் போலீஸ் பாய் மர படகு பயணம் - 2022 "-னை 09.07.2022 அன்று துவங்கி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று சுமார் 540 கடல் மைல் தூரம் பயணித்து மீண்டும் 17.07.2022 அன்று சென்னை வந்தடைந்தது. இதன்மூலம், இந்திய பாய்மரபடகுச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது.இச்சாதனையை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி  கௌரவித்தார்.  துணைஆசிரியர்.V.பிரபு.

கரூர்மாவட்டகாவல்துறைசார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வுநிகழ்ச்சி.

Image
  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் IPS  அவர்களின் உத்தரவின் பேரில்  உளவியல் ஆலோசகர் Dr.அசோக் அவர்கள் தலைமையில்  26.07.2022  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட N.S.K நகரில் உள்ள பாக்கியராஜ் திருமண மண்டபத்தில் அப்பகுதியில் உள்ள பெண்ளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான  விழிப்புணர்வுநிகழ்ச்சியில்  விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது மேலும் சைபர் கிரைம்  மற்றும் *Online Line Fraud* பற்றிய குற்றங்கள் ஏதேனும் நடைபெறுமாயின் *1930* என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. எங்கும் எப்பொதும் காவல் உதவி.... அவசர அழைப்புக்காக புதிய செயலி பற்றி எடுத்துரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெண்கள் திரளாககலந்துக்கொண்டனர். நிருபர்.ஜெயபிகாஷ்.

தஞ்சாவூர்மாவட்டம்அய்யம்பேட்டை அருகே ஊர்க்காவல் படை வீரர் மதன் மின்சாரம் தாக்கி பலியானார்.

Image
 தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வேம்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி. இவர், வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது கணவர் ஸ்ரீரங்கம். தி.மு.க. ஊராட்சி செயலாளர். இவர்களது மகன் மதன்(வயது 24). ஊர்க்காவல் படை வீரரான இவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார்.  22.07.22 இரவு மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இவர் வேம்பக்குடி சமுதாய கூடம் அருகே சென்றபோது திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு இருந்த சமுதாய கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தார். மின்சாரம் தாக்கி சாவு மழை சற்று ஓய்ந்த பிறகு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் அருகில் இருந்த உயர் கோபுர மின் விளக்கின் கம்பத்தில் பட்டது. அப்போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் மதன் மீது பாய்ந்தது.இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இ

திருநெல்வேலிமாவட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன்IPS அவர்கள்

Image
கொரோனா காலங்களில் குழந்தைகள்  தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையிலும்     குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்தி அவர்களை  ஊக்கப்படுத்தி,   2021-2022 ஆம் கல்வியாண்டில்  பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற செய்துள்ளனர்.  வெற்றி  பெற்ற குழந்தைகளையும் அதற்கு  காரணமாக இருந்த  பெற்றோர்களையும் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா இன்று  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன், IPS அவர்கள், தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில்  பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 24 காவல் துறையினரின் குழந்தைகளின்,  பெற்றோர்களை அழைத்து அவர்களது கரங்களால் குழந்தைகளுக்கு  பொன்னாடை, சந்தனமாலை  அணிவித்து பெற்றோர்கள் கௌரவபடுத்தினர். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் மேலும் குழந்தைகளின் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்த

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான மாற்றத்தை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,SP.Dr.L.பாலாஜிசரவணன்தலைமையில்ஆலோசனைக்கூட்டம்

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான மாற்றத்தை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,. அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதற்கு பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தனியார்துறை அதிகாரிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்      Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் தனியார்துறை அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிவதற்கும்  (22.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் தூத்துக்குடியிலுள்ள முக்கிய தனியார் நிறுவனத்தினர், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் பல

தஞ்சையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள்கைது காவல் துறையினர் அதிரடி.

Image
  தஞ்சை காந்திபுரம் அருகே இளைஞர்கள் சிலர் பல நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது..‌தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் நகர மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ‌. அப்போது காவல்துறையினரை பார்த்தவுடன் இரண்டு இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.. இளைஞர்கள் ஓடுவதை கண்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்... விசாரணையில் தஞ்சாவூர் சிங்க பெருமாள் கோவில் குளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது24) ,காந்திபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 25) என்பதும் இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது... பின்னர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நிருபர்.சக்திவேல்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில்CCTNS வலைதளமூலம் நுணுக்கமாக தகவல்கள் கண்டறியும்பெண் தலைமைகாவர் தங்கமலர்மதி.SP.பாராட்டு

Image
 திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  இயங்கிவரும்  மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில்  தலைமை காவலராக திருமதி. தங்கமலர்மதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேற்படி தலைமை காவலர் அவர்கள் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இருந்த இடத்தில் இருந்து  கொண்டு CCTNS வலைதளம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, தூத்துக்குடி, விருதுநகர்,மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர் மற்றும் தேனி  ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம்  தெரியாமல்  இறந்து கிடந்த நபர்களின் புகைப்படங்களை CCTNS வளைதளம் மூலம் கண்டறிந்து வருகிறார். இவரது பணியை காவல் உயர் அதிகாரிகள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூரை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் காணாமல் போனதாக அவர் மனைவி புகாரின் பேரில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன சுபாஷ் சந்திரபோஸ்  மீது அடிதடி மற்றும் திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் மேற்படி சுப

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது காவல்குழுவினர் அதிரடி.

Image
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு. பத்ரி நாராயணன் IPS அவர்கள் அரசால்  தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் (20.07.2022) மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  காவல் ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்கள் நடத்திய சோதனையில்  கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த காரமடையைச் சேர்ந்த மணிகண்டன்(25) மற்றும் முகமது அசாருதீன்(22) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிலோகிராம் எடையுள்ள  கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.  இது போன்ற சட்டவிரோதமான செயல்களில்  ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். நிருபர்கள்.P.நடராஜன்,அப்பாச

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காணாமல்போன மனநலம்பாதிக்கபட்டபெண் உடன்கண்டுபிடித்து தாயிடம்ஒப்படைத்தகாவல்துறையினர்

Image
 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காணாமல்போன மனநலம்பாதிக்கபட்டபெண் உடன்கண்டுபிடித்து தாயிடம்ஒப்படைத்தகாவல்துறையினர்.தொண்டி சரகத்திற்கு உட்பட்டமுள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த காளி என்ற பெண் மகள் கபினியாவுடன் /18தொண்டி அரசு மருத்துவமனை க்கு மகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக வந்துள்ளார் மகள் கபிநயா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வருகிறது மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துவிட்டு மருந்து வாங்குவதற்காக மகளை உட்கார வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார் . திரும்பி வந்து பார்க்கும் பொழுது மகளைக் காணவில்லை இதனால் அங்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது இதை அறிந்த காவல் துறை ஆய்வாளர் எஸ் முருகேசன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர்உடனடியாக அங்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரிடம் ஆறுதல் கூறி காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் முருகன் என்பவர் தலைமையில் ஒரு டீமும்நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர் துரைப்பாண்டி அவர்கள் தலைமையில் ஒரு டீமும் அமைத்து தொண்டி பேரூராட்சி அருகில் உள்ள கடற்கரையில் நின்று கொண்டிருந்த பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர் பெண்ணின் தாயார் காவல்துறை ஆய்வ

கோவை மாவட்டம்போதைக்காக வலிமருந்தை சிரஞ்சிமூலம் நரம்பில் செலுத்திய BE.மாணவன்உயிரிழப்பு மருந்துகடைக்காரர் கைது .

Image
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படிக்கும் அஜய் குமார் என்ற மாணவன் தான் நண்பருடன்  தங்கி இருந்த அறையில் கடந்த 13.07.2022 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்ததால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்பு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை பரிசோதனை செய்த மருத்துவர் அஜய் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுசம்பந்தமாக இறந்த மாணவனின் தந்தை சௌந்தரபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  பின்னர் இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில்  இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துக்களை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இது சம்மந்தமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைக

பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

Image
   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்கோ சட்டம் குறித்தும், காவல் உதவி செயலி  குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார்.  இதன்படி 15-07-22 பணகுடியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி அவர்கள்,சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், சமூக வலைதளங்களில் முகம்‌ தெரியாத நபர்களிடம் நட்புடன் பழக வேண்டாம் எனவும், காவல் உதவி செயலியின்  பயன்கள் குறித்தும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக 181 இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழி எடுத்து போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

தூத்துக்குடி குற்றமில்லாமாவட்டமாகமாற்ற மாற்றத்தைதேடிசமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி SP.Dr.L.பாலாஜிசரவணன்.

Image
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி  அனைத்து  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றங்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவதற்கு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதன் பயனாக ஜாதி ரீதியான டி-சர்ட்கள், கையில் கட்டக்கூடிய கயிறுகள், ஸ்டிக்கர்கள் உட்பட சாதி உணர்வை தூண்டும் வகையில் எந்த பொருளையும் விற்பனை செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத்தினர் தாங்களாகவே முன் வந்து பத்திரிகை செய்தி மற்றும் பல்வேறு தகவல் பரிமாற்றத்தின் மூலம் அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். மேலும் ஜாதிய பதட்டங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் உடுருவி, அதன் மூலம் கொடிய மோதல்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணியாக ஜாதி நூல், ஸ்டிக்கர், டி-சர்ட் போன்றவை அமைந்துள்ளதையும், தற்போது குழந்தைகளுக்கும், அவர்கள்  வளரும் காலத்திலேயே ஜாதிய அடையாளத்தை வலியுறுத்தும் சக்திய

இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகம் போன்றவற்றை மூட காவல் துறையினர் வற்புறுத்தக் கூடாது - தமிழ்நாடு DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அறிவுறுத்தல்.

Image
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 -ன் படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்திய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (24×7) அனைத்து நாட்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் .DGP.Dr.C. சைலேந்திரபாபு¸ IPS.¸ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். துணைஆசிரியர்.G.ஶ்ரீநிவாஸன்.

திருச்சிமாநகரில் மக்கள்பாதுகாப்புகருதி குற்றதடுப்புநடவடிக்கையில்அதிரடி காவல்ஆணையர் கார்த்திகேயன் IPS

Image
காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்IPS அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஈடுபடுவோர் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்களிடமிருந்து குற்றம் புரியமாட்டேன் என நன்னடத்தை பிணையம் பெற்றும் அதனை மீறுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு திரு.V.அன்பு, மற்றும்  திருமதி.B.ஶ்ரீதேவி,தெற்கு, மற்றும் சரககாவல் உதவி ஆணையர்கள்  மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.  அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தவர்களிடம் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி கடந்த 6 மாதங்களில் 491 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு நன

திருச்சி மாவட்டம்,முசிறி வட்டாரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் முசிறி வட்டார கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு நிர்வாகிகளுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி பயிற்சிமுகாம்

Image
 திருச்சி மாவட்டம்,முசிறி வட்டாரம்  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் முசிறி வட்டார  கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு நிர்வாகிகளுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு  குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி பயிற்சிமுகாம்.12.07.22   ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாலா ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கி திறன் வளர்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு புறத் தொடர்பு பணியாளர் கீதா வரவேற்றார். மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுப்பதில் சுய உதவிக் குழு நிர்வாகிகளின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார். சமூக நல விரிவாக்க அலுவலர் ஆரோக்கிய மேரி ஜெயா குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தை திருமணத்தை தடுப்பதில் சமூகத்தின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார். நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கஞ்சா மற்றும் குட்கா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு SP.P.சரவணன் IPS பாராட்டு.

Image
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும்,  கஞ்சா வழக்குகளில்  சம்பந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்ய மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை  பொருட்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டு   புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து  எதிரிகளை விரைந்து கைது செய்து வரும் களக்காடு உதவி ஆய்வாளர் திரு.ஆன்டோ பிரதீப், தலைமை காவலர் திரு.ஜெரால்டு பிரேம் நாத், முதல் நிலை காவலர் திரு.உச்சிமாகாளி  மற்றும் ஆயுதப்படை காவலர்கள் திரு.இசக்கிமுத்து, திரு.அன்புராஜ் ஆகியோரை  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது மாவட்டகாவல்துறை தனிப்படை காவலகுழுவினர் அதிரடி

Image
 .தஞ்சாவூர்மாவட்ட வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே வூர்கஞ்சா விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்த தனபால் மகன் சிவக்குமார் (வயது 24), திருவையாறு கண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆகாஷ் சண்முகம் (20) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் தஞ்சை கிழக்கு காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், ஆகாஷ் சண்முகம் ஆகிய 2 பேரையும் நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தினர். நிருபர்.சக்திவேல்.

தஞ்சைமாவட்டம் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Image
 தஞ்சைமாவட்டம் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாரத்தான் போட்டி போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  5 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் உத்தரபிரதேசம், மராட்டியம், மைசூர் மற்றும் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, மதுரை, சேலம், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, தேனி, சென்னை, அரியலூர், பொன்னமராவதி, நாகை, பெரம்பலூர், சீர்காழி, ஈரோடு, மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 1,350 பேர் கலந்து கொண்டனர்.  அமைச்சர் ஓடினார் மேலும் 20 கிலோமீட்டர் பிரிவில் அமைச்சர் ம

கோவை மாவட்ட காவலர் குடும்பங்களுக்கு ஆயுதப்படையில் விளையாட்டுப் போட்டி.வெற்றிபெற்றவர்களுக்கு SP.பத்ரிநாராயணன்IPS பரிசுகள்வழங்கி வாழ்த்து.

Image
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவலர்களின் குடும்பங்களது நலனை கருத்தில் கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  (09.07.2022) நடத்தப்பட்டது.  அப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (10.07.2022) பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதுடன், வெற்றி பெற்ற காவலர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்நிகழ்ச்சி ஏற்பாடு,  காவல்துறையினரின் குடும்பத்தினர்களிடையே மகிழ்ச்சியை அளித்ததுடன், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிருபர்.P.நடராஜ்

திருப்பூர் மாநகரில் பெரும்பாலானமக்கள், மாணவர்கள் செல்லும்பாதையில் மரணகுழி உயிரிழப்பு நேரிடும் அபாயம் கண்டுக்கொள்ளாதமாநகராட்சி

Image
 திருப்பூர் மாநகரில் பெரும்பாலானமக்கள், மாணவர்கள் செல்லும்பாதையில் மரணகுழி உயிரிழப்பு நேரிடும் அபாயம் கண்டுக்கொள்ளாதமாநகராட்சி பீதியிலமக்கள். திருப்பூர் மாநகராட்சி,24 ஆவது வார்டு லட்சுமி திரையரங்கம் அருகில் போடப்பட்டுள்ள தரைப்பாலம் அருகில் மரண குழி நீண்ட நாட்களாக உள்ளது இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது, அந்த வழியாக தினந்தோறும் பனியன் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் என லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் மரண குழி நீண்ட நாட்களாக உள்ளது இதனை சரி செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாதது போல் உள்ளது மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் இல்லை எனில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கின்றனர். சமீப காலமாக தொடர் மழையின் காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து வருகிறது இந்த நிலையில் இது போன்ற மரண குழிகள் அபாயகரமாக உள்ளதை கணக்கெடுத்து உடனடியாக அதனை சரி செய்ய வே

இந்தியாவின் தன்னிகரற்ற தடகளவீராங்கனை P.Tஉஷா மாநிலங்களவைஉறுப்பினராக நியமனம் குவியும் வாழ்த்துக்கள்

Image
   உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவர் பி.டி.உஷா என்று அழைக்கப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா. இவர் சாதனையை முறியடிக்க இன்றுவரை இன்னொரு இந்தியரால் இயலவில்லை. "இந்திய தடகளங்களின் அரசி”..."இந்தியாவின் தங்க மங்கை"...“பய்யொலி எக்ஸ்பிரஸ்”... இந்திய விளையாட்டு துறை பணம் படைத்தவர்களை மட்டுமே பட்டு கம்பளம் விரித்து வரவேற்ற காலத்தில் வறுமையும், பிணியும்  வாட்டிய குடும்பத்தில் பிறந்து ஒலிம்பிக் நுழைவு வாயிலை மிதிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஏறத்தாள இருபது ஆண்டுகளாக விளையாட்டு துறையில் நிலைத்து நிற்க ஒரு பெண்ணாக எத்தனை கஷ்டங்களை தடைகளை, அதிகார அடக்குதல்களை சந்தித்திருப்பார். ஓரிரு வாக்கியங்களில் அவர் பட்ட கஷ்டங்களை விளக்குவது என்பது முடியாத ஒன்று.  முதலில் அவர் பெற்ற ஊக்க தொகை வெறும் 250 மட்டுமே. விளையாட்டு துறையில் ஆண்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த பெண்கள் விளையாட அஞ்சுகிற காலகட்டம் அது . அந்நிலையில் அவருடைய சாதனை நினைத்து பார்க்க முடியாத ஒன்று.இன்று பல பெண்கள் விளையாட்டு துறையில் சாதிக்க இவரே மிகப்பெரிய முன்னுதாரணம்.தோல்வியை க

கீரனூர் அருகே தொழிலதிபரை ரூபாய் 70 லட்சம் பணம் கேட்டு கடத்திய கும்பலை 6 மணி நேரத்தில் கைது செய்து தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரை திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் DIG.சரவணசுந்தர் IPS பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Image
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார்.     கடந்த 02.07.2022 - ஆம் தேதியன்று காலை 05.05 மணிக்கு சந்திரசேகரன் கீரனூர் to குண்றாண்டார் கோவில் ரோட்டில் நாஞ்சுர் விளக்கு பிரிவு ரோடு அருகே நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளை நிற Scorpio காரில் கடத்திவிட்டதாக அவரது மகன் மணிகண்டன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நிஷாபார்த்திபன் IPS அவர்கள்  மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், தொழில் அதிபர் சந்திரசேகரனை கடத்திய நபர்கள் புகார்தாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் பணம் கேட்டதன் அடிப்படையில், எதிரிகளை தேடிச் சென்றதில் சூரியூர் அருகே கடத்தப்பட்டவரை எதிரிகள் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மேற்படி கடத்தப்பட்டவர் நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தப்பியோடிய 7 எதிரிகளை 6 மணி நேரத்திற்குள் துரிதமாக கைது செய்யப்பட்டன

கோவை மாவட்டம்பிறந்து 4 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை கடத்தப்பட்ட 22 மணி நேரத்தில் நல்ல முறையில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைப்பு. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை IG பாராட்டு

Image
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் திவ்யபாரதி மற்றும் யூனிஸ் ஆகியோர்களுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 29.06.2022-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் (03.07.2022) அதிகாலை சுமார் 05.00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர்களது பச்சிளம் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. உடனே அவர்கள் அங்கிருந்த புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன்,  சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தையை உடனடியாக பத்திரமாக மீட்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரப் புலன் விசாரணை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில், காவல்துறையினர் மருத்துவமனைக்கு வெளியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக

சேலம்மாநகரகாவல்துறைசார்பாக ஹோட்டல் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுறுத்தல் கூட்டம்

Image
 .  05.07.2022 ம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்கள், சேலம் மாநகரத்தில் உள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு காவலர் சமுதாய கூடத்தில் வைத்து பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கினார்.  இக்கூட்டத்தில் சேலம் மாநகரத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றங்களை தடுக்கவும் மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சேலம் மாநகரத்தில் உள்ள ஓட்டல் மற்றும் லாட்ஜ் நிர்வாகிகளுக்கு  கீழ்காணும் அறிவுரைகள் வழங்கினார்.  1.லாட்ஜில் தங்குவர்களிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்று பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.   2.அவர்கள் அளிக்கும் தகவல் உண்மைதானா என உறுதி படுத்தவேண்டும்.  3.லாட்ஜில் தங்குபவர்கள் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 4. லாட்ஜில் தங்குபவர்களின் செயல்பாடுகள் சட்டதிற்கு புறம்பாக  தென்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இவ் ஆலோசனை கூட்டத்தில் காவல் உதவி ஆணையாளர்கள் A.வெங்கடேசன், திரு.P.அசோகன்,  திரு.N.K.செல்வராஜ்