தஞ்சையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது மாவட்டகாவல்துறை தனிப்படை காவலகுழுவினர் அதிரடி



 .தஞ்சாவூர்மாவட்ட வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே வூர்கஞ்சா விற்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும்வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்த தனபால் மகன் சிவக்குமார் (வயது 24), திருவையாறு கண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆகாஷ் சண்முகம் (20) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் தஞ்சை கிழக்கு காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், ஆகாஷ் சண்முகம் ஆகிய 2 பேரையும் நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தினர்.

நிருபர்.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.