"விபத்தில்லா சாலை பயணம்" என்ற தலைப்பில் 5 கிராமங்களில் அரியலூர்மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.



திருச்சி சரக  காவல் துறை துணைத் தலைவர் திரு.A. சரவண சுந்தர் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் (பொறுப்பு) அவர்களின் அறிவுரையின்படி அரியலூரில் இருந்து திருமானூர் செல்லும் சாலையில் உள்ள ஐந்து கிராமங்களான வாரணவாசி, சமத்துவபுரம், காந்தி நகர், திடீர் குப்பம், மற்றும் கீழப்பழுவூர் ஆகிய இடங்களில் இன்று 24.07.2022  அந்தந்த கிராமங்களில் "விபத்தில்லா சாலை பயணம்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தலைக்கவசத்தின் முக்கியத்துவம், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தினால் குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும்  எடுத்துரைக்கப்பட்டது. அரியலூர் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிருபர்.ம.மஹேஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.