கோவை மாவட்டம்போதைக்காக வலிமருந்தை சிரஞ்சிமூலம் நரம்பில் செலுத்திய BE.மாணவன்உயிரிழப்பு மருந்துகடைக்காரர் கைது .



கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படிக்கும் அஜய் குமார் என்ற மாணவன் தான் நண்பருடன்  தங்கி இருந்த அறையில் கடந்த 13.07.2022 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்ததால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்பு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை பரிசோதனை செய்த மருத்துவர் அஜய் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுசம்பந்தமாக இறந்த மாணவனின் தந்தை சௌந்தரபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு முரணான மரணம் என மதுக்கரை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில்  இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துக்களை ஊசி மூலம் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. இது சம்மந்தமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரிஞ்சு (Syringe) மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரிய தெரியவந்தது. மேலும் இறந்த மாணவனின் நண்பர்களை விசாரணை செய்ததில் மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் தனியார் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் என்பவர்  எவ்வித மருத்துவர் பரிந்துரை இல்லாமல், லாப நோக்கத்தோடு இம்மாணவனுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே மேற்படி வழக்கின் சட்டப்பிரிவை மாற்றம் செய்து, போதை ஏற்படுத்த கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக முகமது பஷீரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். 

மாணவர்கள் இளம் வயதிலேயே போதை போன்ற தவறான வழியில் செல்லக்கூடாது என்றும், யாரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் உட்கொள்ளக் கூடா து எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.