இந்தியாவின் தன்னிகரற்ற தடகளவீராங்கனை P.Tஉஷா மாநிலங்களவைஉறுப்பினராக நியமனம் குவியும் வாழ்த்துக்கள்

 


 உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவர் பி.டி.உஷா என்று அழைக்கப்படும் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா.

இவர் சாதனையை முறியடிக்க இன்றுவரை இன்னொரு இந்தியரால் இயலவில்லை.

"இந்திய தடகளங்களின் அரசி”..."இந்தியாவின் தங்க மங்கை"...“பய்யொலி எக்ஸ்பிரஸ்”...

இந்திய விளையாட்டு துறை பணம் படைத்தவர்களை மட்டுமே பட்டு கம்பளம் விரித்து வரவேற்ற காலத்தில் வறுமையும், பிணியும்  வாட்டிய குடும்பத்தில் பிறந்து ஒலிம்பிக் நுழைவு வாயிலை மிதிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

ஏறத்தாள இருபது ஆண்டுகளாக விளையாட்டு துறையில் நிலைத்து நிற்க ஒரு பெண்ணாக எத்தனை கஷ்டங்களை தடைகளை, அதிகார அடக்குதல்களை சந்தித்திருப்பார். ஓரிரு வாக்கியங்களில் அவர் பட்ட கஷ்டங்களை விளக்குவது என்பது முடியாத ஒன்று. 

முதலில் அவர் பெற்ற ஊக்க தொகை வெறும் 250 மட்டுமே. விளையாட்டு துறையில் ஆண்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த பெண்கள் விளையாட அஞ்சுகிற காலகட்டம் அது . அந்நிலையில் அவருடைய சாதனை நினைத்து பார்க்க முடியாத ஒன்று.இன்று பல பெண்கள் விளையாட்டு துறையில் சாதிக்க இவரே மிகப்பெரிய முன்னுதாரணம்.தோல்வியை கண்டு துவண்டு நில்லாமல் தோல்வியையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட தன்னம்பிக்கை பெண்.நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்ட சாதனையாளர். இன்று பல பெண்கள் உஷா என்ற பெயரில் உள்ளதற்கு இவரே காரணம்.

ஏழ்மை நிறைந்த சூழ்நிலையிலும் கடினமாக உழைத்து விடா முயற்சியுடன் சுமார் 10 ஆண்டு காலம் தடகளத்தில் கோலோச்சிய‌ இந்தியாவின் தங்க மங்கையான பி.டி.உஷாவை விட மாநிலங்களவையில் அமர்ந்திட  தகுதி வாய்ந்த நபர் வேறு யார் இருக்க முடியும்?

தங்க மங்கைக்கு வாழ்த்துகள்.போலீஸ்பார்வை குழும்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.