திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில்CCTNS வலைதளமூலம் நுணுக்கமாக தகவல்கள் கண்டறியும்பெண் தலைமைகாவர் தங்கமலர்மதி.SP.பாராட்டு



 திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  இயங்கிவரும்  மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில்  தலைமை காவலராக திருமதி. தங்கமலர்மதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேற்படி தலைமை காவலர் அவர்கள் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, இருந்த இடத்தில் இருந்து  கொண்டு CCTNS வலைதளம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, தூத்துக்குடி, விருதுநகர்,மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர் மற்றும் தேனி  ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம்  தெரியாமல்  இறந்து கிடந்த நபர்களின் புகைப்படங்களை CCTNS வளைதளம் மூலம் கண்டறிந்து வருகிறார். இவரது பணியை காவல் உயர் அதிகாரிகள் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூரை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் காணாமல் போனதாக அவர் மனைவி புகாரின் பேரில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன சுபாஷ் சந்திரபோஸ்  மீது அடிதடி மற்றும் திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் மேற்படி சுபாஷ்சந்திரபோஸ்க்கு நீதிமன்றத்தால்  பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.*

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் காணமல்போன நபரை  சுத்தமல்லி காவல்துறையினர் தேடிவந்த நிலையில் பெண் தலைமை காவலர் திருமதி.தங்கமலர்மதி அவர்கள், சுபாஷ் சந்திரபோஸை CCTNS வலைதளம் மூலம்  கண்காணித்து அடையாளம் கண்டுபிடித்து சுத்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில்  தலைமறைவாக இருந்த எதிரியை சுத்தமல்லி போலீசார் விரைந்து கைது செய்து 20.07.2022-ம் தேதி சிறையில் அடைத்தனர்.

மேற்படி சம்பவத்தை அறிந்த  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பெண் தலைமை காவலர் திருமதி. தங்கமலர்மதி அவர்களை நேரில் அழைத்து பரிசு மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி  மென்மேலும்  பணிசிற்க்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.