திருச்சி மாவட்டம்,முசிறி வட்டாரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் முசிறி வட்டார கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு நிர்வாகிகளுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி பயிற்சிமுகாம்


 திருச்சி மாவட்டம்,முசிறி வட்டாரம்  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் முசிறி வட்டார  கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு நிர்வாகிகளுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு  குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி பயிற்சிமுகாம்.12.07.22   ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாலா ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கி திறன் வளர்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார். 



வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு புறத் தொடர்பு பணியாளர் கீதா வரவேற்றார். மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுப்பதில் சுய உதவிக் குழு நிர்வாகிகளின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார். சமூக நல விரிவாக்க அலுவலர் ஆரோக்கிய மேரி ஜெயா குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தை திருமணத்தை தடுப்பதில் சமூகத்தின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார். நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த  புகார்களை ஏன் பதிவு செய்ய வேண்டும், எதற்காக பதிவு செய்ய வேண்டும்,யாரிடம் பதிவு செய்ய வேண்டும் , சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.




 சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணிகள், செயல்பாடுகள், சட்டம் சார்ந்த உதவிகள்,  ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினராகிய சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பங்கு, குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து பயிற்சி அளித்தார். சமூகப் பணியாளர் பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.திறன் வளர்ப்பு பயிற்சியில் 75க்கும் மேற்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சுய உதவிக் குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரம், போஸ்டர்கள் விநியோகம் செய்யப்பட்டது.  

நிருபர். S,மணிகண்டன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.