தஞ்சையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள்கைது காவல் துறையினர் அதிரடி.

 

தஞ்சை காந்திபுரம் அருகே இளைஞர்கள் சிலர் பல நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது..‌தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் நகர மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ‌.



அப்போது காவல்துறையினரை பார்த்தவுடன் இரண்டு இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.. இளைஞர்கள் ஓடுவதை கண்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்... விசாரணையில் தஞ்சாவூர் சிங்க பெருமாள் கோவில் குளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது24) ,காந்திபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 25) என்பதும் இவர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது... பின்னர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 100கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நிருபர்.சக்திவேல்

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.