உலகின் மிக நீண்ட பாய்மரப் படகு பயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபுIPS



தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவானது 3 பாய்மரப் படகுகளின் மூலம் மிக நீண்ட தூர "மரைன் போலீஸ் பாய் மர படகு பயணம் - 2022 "-னை 09.07.2022 அன்று துவங்கி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று சுமார் 540 கடல் மைல் தூரம் பயணித்து மீண்டும் 17.07.2022 அன்று சென்னை வந்தடைந்தது. இதன்மூலம், இந்திய பாய்மரபடகுச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது.இச்சாதனையை படைத்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டி, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி  கௌரவித்தார். 

துணைஆசிரியர்.V.பிரபு.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.