கஞ்சா மற்றும் குட்கா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு SP.P.சரவணன் IPS பாராட்டு.




திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும்,  கஞ்சா வழக்குகளில்  சம்பந்தப்பட்ட எதிரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்ய மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை  பொருட்களை விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டு   புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து  எதிரிகளை விரைந்து கைது செய்து வரும் களக்காடு உதவி ஆய்வாளர் திரு.ஆன்டோ பிரதீப், தலைமை காவலர் திரு.ஜெரால்டு பிரேம் நாத், முதல் நிலை காவலர் திரு.உச்சிமாகாளி  மற்றும் ஆயுதப்படை காவலர்கள் திரு.இசக்கிமுத்து, திரு.அன்புராஜ் ஆகியோரை  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.