காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்: கோவில்பட்டி புதிய துணைகாவல்கண்காணிப்பாளர் DSP.K.வெங்கடேஷ்.



கோவில்பட்டி பகுதியில் சட்ட ஒழுங்கை மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கோவில்பட்டி புதிய.DSP.யாக பொறுப்பு ஏற்றுள்ள கே.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த உதயசூரியன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடம் கடந்த 3 மாதங்களாக காலியாகவே இருந்தது. மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் 2 மாதத்திற்கு மேலாகவும், தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பு சில நாள்களாகவும் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தனர்.

இந்நிலையில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக கே.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் வியாழக்கிழமை காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, திருட்டுக்களை அறவே ஒழிக்க காவல் துறையோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும், பொதுமக்கள் காவல் துறையோடு நண்பர்களாக பழக வேண்டும், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் வயர் லெஸ் இணைப்பு முறையாக இயக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும், சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா, புகையிலை பொருள்கள் விற்பனையை அறவே ஒழிக்கப்படுவதுடன் இதில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், போலீஸாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள DSP .K.வெங்கடேஷ் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. (மெக்கானிக்கல் துறை) படித்து முடித்துவிட்டு, 2 தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அரசு தேர்வு மூலம் வணிக வரித் துறையில் உதவியாளராகவும், கூட்டுறவு துறையில் சீனியர் ஆய்வாளராகவும் பணியாற்றியவர். பின்னர் 2020இல் நடைபெற்ற குரூப் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடிந்த பின், காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்.முருகேசன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.