திருநெல்வேலிமாவட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன்IPS அவர்கள்


கொரோனா காலங்களில் குழந்தைகள்  தொடர்ந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையிலும்     குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்தி அவர்களை  ஊக்கப்படுத்தி,   2021-2022 ஆம் கல்வியாண்டில்  பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற செய்துள்ளனர்.  வெற்றி  பெற்ற குழந்தைகளையும் அதற்கு  காரணமாக இருந்த  பெற்றோர்களையும் கௌரவிக்கும் வகையில் பரிசளிப்பு விழா இன்று  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன், IPS அவர்கள், தலைமையில் நடைபெற்றது.


அப்போது மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில்  பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 24 காவல் துறையினரின் குழந்தைகளின்,  பெற்றோர்களை அழைத்து அவர்களது கரங்களால் குழந்தைகளுக்கு  பொன்னாடை, சந்தனமாலை  அணிவித்து பெற்றோர்கள் கௌரவபடுத்தினர். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் மேலும் குழந்தைகளின் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர் திரு.முரளி, அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்சிஸ், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர்  கலந்து கொண்டனர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.