தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான மாற்றத்தை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,SP.Dr.L.பாலாஜிசரவணன்தலைமையில்ஆலோசனைக்கூட்டம்



தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான மாற்றத்தை உருவாக்குவதற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,. அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதற்கு பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தனியார்துறை அதிகாரிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்      Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் தனியார்துறை அதிகாரிகள் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைப்பதற்கான ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிவதற்கும்  (22.07.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இதில் தூத்துக்குடியிலுள்ள முக்கிய தனியார் நிறுவனத்தினர், பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருநங்கைகள் சார்பாக அவரது கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் அவர்களது தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில்  வேலை வாய்ப்பிற்க்கான வழிவகை செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் குற்றம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு தருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது சமுதாயத்தில் பல திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். நீங்கள் அனைவரும் உங்களது கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் உங்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமுதாயத்தில் பொதுமக்களுடன் சரிசமமாக திகழ்வதற்கு நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள். ஓவ்வொரு இடத்திலும் நீங்கள் சிறந்தவர்களாக இருப்பதற்கான தகுதியை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் அனைவரிடமிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள், தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட் போன்ற இடங்களில் திருநங்கைகள் சிலர் நன்கொடையாக பணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். திருநங்கைகள் எந்த வித குற்ற செயல்களிலும்  ஈடுபடாமல், உங்களுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்பை பெற்று, உங்களை பற்றிய புரிதல்களை சமுதாயத்தில் நல்ல விதமாக ஏற்படுத்தி, நல்ல மாற்றத்தை உருவாக்குங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடிய மின்சார கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் திருநங்கை சுபப்பிரியா, தூத்துக்குடியில் வழக்கறிஞராகவும், அன்பு டிரஸ்ட் மூலமாக முதியோர்களுக்கு உதவி புரிந்து வரும் திருநங்கை விஜி, சமூக நலத்துறை உறுப்பினராக பணியாற்றி வரும் பியூட்டி என்ற திருநங்கை ஆகியோரின் சிறப்பான செயலை பாராட்டி மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் IPS தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விநாயகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்டஅலுலவலர் லீமாரோஸ், வருவாய்துறை அலுவலக நிர்வாக அதிகாரி ராஜலெட்சுமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் Dr. அருண்குமார்,  தூத்துக்குடி தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுபாட்டு சங்கம் செவாலியர் ரோஸ் சொசைட்டி திட்ட மேலாளர் டிலைட் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

நிருபர.அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.