ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காணாமல்போன மனநலம்பாதிக்கபட்டபெண் உடன்கண்டுபிடித்து தாயிடம்ஒப்படைத்தகாவல்துறையினர்




 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காணாமல்போன மனநலம்பாதிக்கபட்டபெண் உடன்கண்டுபிடித்து தாயிடம்ஒப்படைத்தகாவல்துறையினர்.தொண்டி சரகத்திற்கு உட்பட்டமுள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த காளி என்ற பெண் மகள் கபினியாவுடன் /18தொண்டி அரசு மருத்துவமனை க்கு மகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக வந்துள்ளார் மகள் கபிநயா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வருகிறது மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துவிட்டு மருந்து வாங்குவதற்காக மகளை உட்கார வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார் .

திரும்பி வந்து பார்க்கும் பொழுது மகளைக் காணவில்லை இதனால் அங்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது இதை அறிந்த காவல் துறை ஆய்வாளர் எஸ் முருகேசன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர்உடனடியாக அங்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரிடம் ஆறுதல் கூறி காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் முருகன் என்பவர் தலைமையில் ஒரு டீமும்நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர் துரைப்பாண்டி அவர்கள் தலைமையில் ஒரு டீமும் அமைத்து தொண்டி பேரூராட்சி அருகில் உள்ள கடற்கரையில் நின்று கொண்டிருந்த பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர் பெண்ணின் தாயார் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார் பொதுமக்கள் காவல்துறையின் இந்த துரித நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர்.

நிருபர்.சிவகுருநாதன்/வட்டாணம்பாண்டி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.