தூத்துக்குடி குற்றமில்லாமாவட்டமாகமாற்ற மாற்றத்தைதேடிசமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி SP.Dr.L.பாலாஜிசரவணன்.



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவுப்படி  அனைத்து  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றங்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவதற்கு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதன் பயனாக ஜாதி ரீதியான டி-சர்ட்கள், கையில் கட்டக்கூடிய கயிறுகள், ஸ்டிக்கர்கள் உட்பட சாதி உணர்வை தூண்டும் வகையில் எந்த பொருளையும் விற்பனை செய்ய வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத்தினர் தாங்களாகவே முன் வந்து பத்திரிகை செய்தி மற்றும் பல்வேறு தகவல் பரிமாற்றத்தின் மூலம் அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். மேலும் ஜாதிய பதட்டங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் உடுருவி, அதன் மூலம் கொடிய மோதல்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணியாக ஜாதி நூல், ஸ்டிக்கர், டி-சர்ட் போன்றவை அமைந்துள்ளதையும், தற்போது குழந்தைகளுக்கும், அவர்கள்  வளரும் காலத்திலேயே ஜாதிய அடையாளத்தை வலியுறுத்தும் சக்தியாக அவைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் உணர்ந்து, அவற்றை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு ‘மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றையும் உருவாக்கி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் மூலம் இந்த நிகழ்ச்சி பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று கையில் கட்டக்கூடிய ஜாதி ரீதியான கயிறுகள், ஸ்டிக்கர் மற்றும் டி-சர்ட் உட்பட ஜாதி உணர்வை தூண்டக்கூடிய அனைத்து வகையான பொருள்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகளுடனும் காவல்துறையினர் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் விளைவாக  (14.07.2022) எந்த நிர்பந்தமும் இல்லாமல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திரு. காமராசு அவர்கள் தாமாகவே முன்வந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகள், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடை வியாபாரிகள் ஜாதி ரீதியான கையில் கட்டக்கூடிய கயிறுகள், ஸ்டிக்கர், டி-சர்ட்கள் போன்ற பொருட்களை விற்க வேண்டாம். சமூக அக்கறையுடன் அனைத்து வியாபாரிகளும் இந்த வேண்டுகோளின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வியாபாரிகளையும் வேண்டுகோள் விடுத்து மேற்படி பேரமைப்பு சார்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். 

இவ்வாறு சமூக அக்கறையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பத்திரிகை செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு முன்வந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்க ஓ, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வியாபாரிகளுக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

நிருபர்கள்.N.ராமசாமிஅய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.