Posts

Showing posts from May, 2022

உலக புகையிலை ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு சேலம்மாநகரில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு M.மாடசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்

Image
 . ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று 31.05.2022 ம் தேதி சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கிளை கல்லூரியான அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் விழைப்புணர்வு ஊர்வலம் (Awareness Rally) நடத்தப்பட்டது. சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து AVR ரவுண்டானா வரை செல்ல புறப்பட்ட ஊர்வலத்தை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள் காலை 08.00 மணிக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் காவல் உதவி ஆணையாளர் திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டார்கள். சிறப்புநிருபர்.ஆசிப்முகம்மது

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 8 நாட்களும் மீட்பு பணியினை எவ்வித பிரதிபலன் எதிர்பாராமல் திறம்பட கையாண்ட பேரிடர் மீட்பு பணி முதன்மை பயிற்சியாளருக்கு நற்சான்றிதழ் வழங்கிமாவட்ட SP.P.சரவணன்IPS பாராட்டு.

Image
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான் குளம் குவாரி  விபத்தில் சிக்கிய 6 நபர்களை மீட்கும்  மீட்பு பணியில் ஈடுபட்ட  மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்க மத்திய தொழிற்படை பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரிடர் மீட்பு முதன்மை பயிற்சியாளர் திரு.மரிய மைக்கில் அவர்களுக்கு, தகவல் கூறியதன் பேரில் அன்று  அதிகாலை  சம்பவம்‌  நடந்த இடத்திற்கு உடனே வந்து‌ சேர்ந்து  மாவட்ட எஸ்.பி  அவர்களுடன் மீட்பு பணி குறித்து ஆலோசனை செய்தார். இவரது ஆலோசனை படி குவாரியில் கயிறு மூலம் கீழே இறங்கி மீட்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு மீட்புப் பணியினர்  உள்ளே சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு அதில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல்வேறு பட்ட இயற்கை இடையூறுகள் வந்தாலும் களத்தில் கடைசி வரை நிலைத்து நின்று தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் கடும் சிரமத்திற்கிடையே 4 பேர் உடல்கள் பத்திரமாக மேலே கொண்டு வருவதற்கு  உதவினார். திரு.மரிய மைக்கில் அவர்கள், பல்வேறு பேரிடர் நிகழ்வுகளில் சவாலான மீட்பு பணி மேற்கொண்டு பல உயிர்களை மீட்ட அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். உயரமான கட்டிடங்கள், மலைகளில் மீ

கள்ளகுறிச்சிமாவட்டம் திருநாவலூர் காவல்நிலையகாவல்ஆய்வாளருக்கு சிறந்தபுலனாய்விற்க்கான விருதினைவழங்கி பாராட்டிய மாண்புமிகுமுதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.

Image
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட  திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர்  சீனிவாசன் அவர்கள் தலைமையில் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுக் கொள்ளை  வழக்கில்  சிறந்த புலனாய்வு  செய்யப்பட்டு நூதன முறையில்  குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்ததற்காக  தமிழகத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை  தமிழக காவல்துறையின்  தலைவர் DGP.Dr.C  சைலேந்திரபாபு அவர்களின் பரிந்துரையின் பேரில் வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருதினை   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால் 8 கிராம் தங்கமும், ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும்  பெற்றார். வடக்கு மண்டலத்திலயே சிறந்த புலனாய்வு விருது பெற்ற ஒரேயொரு காவல் ஆய்வாளர் திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீீீீனுவாசன் அவர்கள் தான்.என்பதுகுறிப்பிடதக்கது. நிருபர்.ராமநாதன்.

விழுப்புரம் மாவட்டம் திருடுபோன 10 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி கைது விழுப்புரம் காவல்துறையினர் அதிரடி

Image
 விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் உட்கோட்டம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடந்த11.05.2022 அன்று அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் களவு போனதாக ரோசனை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருசக்கர வாகனம் தேடப்பட்டு வந்த நிலையில்  கிடைத்த ரகசிய தகவலின் பேரில்உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா IPS., அவர்களின் தலைமையில் காவல்உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ், தமிழ்மணி சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அய்யப்பன், காவலர்கள் ஜனார்த்தனன், பூபாலன் மற்றும் செந்தில் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தேடியதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் வினோத் வயது 21 என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் மேலும் 9 வாகனங்களும் திருடனிடம்இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.\மேற்கண்ட திருடனை கைது செய்துவழக்குபதிவுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.  மேலும் திருடனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்

தூத்துக்குடி மாவட்டம்குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரி திருட்டு - புகாரளித்த ½ மணி நேரத்தில் துரிதமாக லாரியை கண்டுபிடித்த போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட SP. Dr.L பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.

Image
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கபாண்டி (76) என்பவருக்கு சொந்தமான TN 92 C 9706 (Tata Prima) என்ற டாரஸ் லாரியை அதன் ஓட்டுநரான காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மகன் அப்பாஸ் (58) என்பவர்  (24.05.2022) மாலை 4.00 மணிக்கு குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி அனல்மின் நிலைய பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர்  (25.05.2022) காலை 09.00 மணிக்கு மேற்படி ஓட்டுநர் சென்று பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த லாரி காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரியின் உரிமையாளர் தங்கபாண்டி   அளித்த புகாரின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரியில் இருந்த GPS கருவியின் மூலம் லாரி திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ரோடு பகுதியில் உள்ளதை அறிந்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு அலுவலக அதிகாரிகள்  திருநெல்வேலி நகர மற்றும் ஊரக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிமுருகன் மற்றும் திருநெல்

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி மற்றும் தொடர் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 50 பேரை மாவட்ட SP. Dr .L. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

Image
கடந்த 08.05.2022 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர். இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி ஜப்பான் கராத்தே டூ கென்யோ ரியோ தமிழ்நாடு கராத்தே பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். அதேபோன்று கடந்த 27.02.2022 அன்று தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் வீர தமிழன் போர்க்கலை சிலம்பு கூடம் பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர். மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 50 மாணவ மாணவியர்கள்  (25.05.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவ மாணவியர்களை பாராட்டி மென்மேல

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை முதன் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்த காவல் ஆய்வாளருக்கு SP. பாராட்டு.

Image
 திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அறிவித்திருந்தார். இதன்படி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்தனர். இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள் கைது செய்து,  மேற்படி நபரை முதல்முறையாக புகையிலை(Cotpa) விற்பனை வழக்கில் குண்டர் சட்டத்தின்‌ கீழ்  சிறையில் அடைத்தார்.மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்.பெருமாள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன்,IPS  அவர்கள்  நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Image
For the visit of the Hon'ble Prime Minister of India to Chennai on 26.05.2022, 5 tier security arrangements have been made in Chennai with 22,000 police officers and men.  மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்க நாளை (26.05.2022) சென்னை வருகை புரிகிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.  அதன்பேரில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கியுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல், 5 கூடுதல் ஆணையாளர்கள், 8 சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள் (JCs and DIGs), 29 காவ

திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்.

Image
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் எல்லைக்குட்பட்ட அடைமிதிப்பான்குளம் கிராமம் அருகே இயங்கி வந்த கல்குவாரியில் 14.05.2022  அன்று இரவு பாறை சரிந்து விழுந்த விபத்தில் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த 6 பேர் சிக்கியுள்ளதாக கிடைத்த தகவலின்படி,  மழை பெய்த நிலையிலும் இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாத நிலையிலும், தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்த நிலையிலும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்கள் உணர்வுமிகுதியால் உள்ளே சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கயிறு மூலம் இரவிலேயே உள்ளே காயமடைந்த நபர்களுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் உள்ளே இறங்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. அதேசமயம் மீட்புப் படையினருக்கு ஆலோசனை வழங்க முன்னாள் பேரிடர் மீட்பு  முதன்மை பயிற்சியாளர் திரு.மரிய மைக்கில் அவர்கள், தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து தென் மண்டலகாவல் துறை ஐஜி அவர்கள்  அறிவுறுத்

கோவை மாவட்டம் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது...90 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். காவல்துறையினரின் அதிரடி.

Image
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS  அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நபர்களை முற்றிலும் தடுக்கும் விதமாக, மாவட்டம் முழுவதும்  நடத்திய அதிரடி சோதனையில்,  துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன், உதவி ஆய்வாளர் திரு. திலக் மற்றும் 2 காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மார்க்கெட் பகுதியில் பதுக்கி விற்பனைக்கு  வைத்திருந்த கோவையைச் சேர்ந்த   உமா என்பவரது மகன் பாரத் குமார் (30) என்பவரை கைது செய்து  அவரிடமிருந்து 40 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் அதே பகுதியில் மளிகை கடையில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த அட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரது மகன் செல்வின் கானாபாலன் (66), பெரியசாமி என்பவரது மகன் கல்யாண சுந்தரம் (61) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல

காவிரிடெல்டாபாசனத்திற்க்கு மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர்திறக்க இருப்பதால் தஞ்சையில் திட்டபணிகளை நீர்வளத்துறை தலைமைசெயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வுசெய்தார்.

Image
 Additional secretary inspects Cauvery delta dredging works:                                                       காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் 22-05-22 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர் வாரும் பணிகள் ரூ.80 கோடி திட்டமதிப்பில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4,964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதனால் இப்பணிகளை ஜுன் 10-ம் தேதிக்குள் முடிக

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது

Image
 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPSஅவர்கள் தலைமையில் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.                                                                         “Anti Terrorism Day” pledge was taken at office of GCP, led by Tr.T.S.Anbu, IPS, Addl.COP L&O(N).    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், IPS அவர்களின் உத்தரவின்பேரில்,  (20.05.2022) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையாளர் திரு.T.S.அன்பு, IPS அவர்கள் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் Dr. J.லோகநாதன், IPS (தலைமையிடம்), திருமதி.P.C.தேன்மொழி, IPS (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமுண்டீஸ்வரி, IPS காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர்.                                                      இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் திரு.அரவிந்த் (நுண்ணறிவுப்பிரிவு) திருமதி.மீனா, (மத்தியகுற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள், ஆளிநர்கள்  மற்றும் அமைச்ச

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 3 டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், சிறுவன் உள்பட 6 பேர் கைது

Image
 தஞ்சாவூர் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 3 டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், சிறுவன் உள்பட 6 பேர் கைது. செய்துள்ளனர் தஞ்சாவூர் சரகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தஞ்சை காவல்சரக DIG கயல்விழி IPSஅவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ADSP. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்தவகையில் தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில்   தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சொகுசு காரை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர்.அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், மேலும் எராளமான கஞ்சா மூட்டைகள் தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர்

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் DGP.Dr.C.சைலேந்திரபாபு, IPS மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால் IPS ஆகியோர்,சென்னை புதுப்பேட்டை, காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்.

Image
  TAMILNADU Director General of Police  Dr. C. Sylendra Babu IPS  andCHENNAI Commissioner of Police, Tr.Shankar Jiwal IPS inaugurated self service unit in Police Canteen at Pudupet.  தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் DGP திரு.Dr.C.சைலேந்திரபாபு, IPS மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் IPS ஆகியோர்  (17.05.2022) காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை  துவக்கி வைத்தனர்.   இந்நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு.சைலேஷ்குமார் யாதவ், IPS (நலன்), கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்)திரு. Dr.J.லோகநாதன், IPS இணை ஆணையாளர்கள் திருமதி.சாமூண்டிஸ்வரி, IPS (தலைமையிடம்) திரு.S.பிரபாகரன், IPS (கிழக்கு மண்டலம்), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சிறப்புநிருபர்.GD.கமல்.

சென்னையில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தபட இருந்த பச்சைகல், லோகத்தினால் ஆன நாகாபரணலிங்கசிலை மீட்பு சிலைகடத்தல்தடுப்புபிரிவு காவல்குழுவினர் அதிரடி

Image
சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன்கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளதுஎன்ற இரகசிய தகவலை அடுத்து சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் DGP.          Dr.ஜெயந்த் முரளி, IPS அவர்களின் உத்தரவுப்படி, சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவுகாவல்துறை தலைவர் IG திரு.தினகரன், IPS அவர்களின் வழிகாட்டுதலின்படி,                          சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கதிரவன் காவல் உதவி ஆய்வாளர்கள்திரு.ராஜசேகரன்,திரு. செல்வராஜ் மற்றும் காவலர்கள் திரு.பிரபாகரன், திரு.பாண்டிய ராஜ்,திரு.சுந்தர் ஆகியோர்கள் அடங்கிய சிலை திருட்டு கடத்தல்தடுப்பு பிரிவு போலிசார்சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலைகடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இச்சிலைக்கு விலை ருபாய் 25கோடி சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை கடத்தல் காரர்களைநம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் 1.சென்னை வெள்ளவேடு,புதுகாலணியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் (

சென்னைஓமாந்தூரார்மருத்துவமனைவளாகத்தில் டெங்குஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் புகைதளிப்பான் வாகனத்தை துவக்கிவைத்துபேசிய அமைச்சர்கள்

Image
   மருத்துவம்மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே .சேகர்பாபு அவர்கள் ஆகியோர் (16.5.22) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்பு தினத்தையொட்டி புகைத்தெளிப்பான் இயந்திரங்கள் பொருத்திய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தேசிய டெங்கு தடுப்பு தின  உறுதிமொழியை ஏற்று , டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு, டெங்கு தடுப்பு பணியில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.   இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர்,                                            டாக்டர்.ஜெ. இராதாகிருஷ்ணன் IAS பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர். மணிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். சிறப்புநிருபர்.GD.கமல்

திருநெல்வேலிமாவட்டம்முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பெரியபாறைஉருண்டுவிழுந்ததில் 3பேர்பலி மீதமுள்ளவர்களைமீட்கும்பணிதீவிரம் .

Image
  திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு 14-05-22 நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் உள்பட 6 பேர் பள்ளத்தில் மாட்டிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்IPS விரைந்தார். அவர் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தூரல் இருப்பதாலும், சுமார் 300 அடி பள்ளம் என்பதாலும் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பின்னர் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது 6பேரில் 3உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன  இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கற்க்கள்தொடர்ந்து விழுந்துவருவத

செம்பியம் பகுதியில் துணிக்கடையில் நுழைந்து கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து தப்பிய 4 நபர்களை கைது செய்த, செம்பியம் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்சங்கர்ஜிவால் IPS நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Image
Commissioner of Police appreciated and rewarded Sembium Police Team for arresting 4 persons involved in robbery at knife point.    சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாவித் (வ/37) என்பவர், பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 30.04.2022 அன்று மாலை ஜாவித் கடையிலிருந்தபோது, கடையில் துணிகள் எடுப்பது போல வந்த 3 நபர்கள் திடீரென கத்தியை காட்டி ஜாவித்தை மிரட்டி துணிகள் மற்றும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். ஜாவித் பணம் தர மறுத்தபோது, 3 நபர்களில் ஒருவர் கத்தியால் ஜாவித்தின் கையில் தாக்கியபோது, ஜாவித் சத்தம் போடவே, 3 நபர்களும் கடையிலிருந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஜாவித் மேற்படி சம்பவம் குறித்து,  செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க செம்பியம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.செம்பேடு பாபு,  செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜி.ஐயப்பன் தலைமை

திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் SP.P.சரவணன்IPS மருத்துவர்களுக்கு வேண்டுகோள்.

Image
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  14-05-22 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், IPS அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சுகாதார சேவை இணை இயக்குனர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் நிகழும் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்கள், அடிதடி வழக்குகளில்  காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும்,   புலன்விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான  காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  முக்கியமானதாக இருப்பதால் காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  உடனடியாக வழங்கும் பட்சத்தில்  வழக்குகளை  விரைந்து முடித்து வைக்கமுடியும் என்று தெரிவித்தார்.  காயச்சான்றுகளை காவல் துறையினருக்கு விரைந்து வழங்கும்படி‌ மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தலைமைநிருபர்.S.ச

சேலம்மாநகரகாவல் அம்மாபேட்டை காவல்பகுதியில் முக்கியசந்திப்புகளில் CCTV கேமராக்களைதுவக்கிவைத்து காவல்ஆணையர் நஜ்முல் ஹோதா IPS விழிப்பணர்வு உரை

Image
. 13.05.2022-ம் தேதி சேலம் மாநகரம் C1 அம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப், பாலாஜி நகர், செங்கல்அணை ரோடு சந்திப்பு, மாருதிநகர், அதிகாரிப்பட்டி, குமரகிரிபேட்டை பஸ் ஸ்டாப் உள்பட 31 இடங்களில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு 126 அதிநவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.                                                                                                       மேற்படி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது ஏற்கனவே அம்மாப்பேட்டை பகுதிகளில் 132 கேமராக்கள் துவக்கிவைத்து பயன்பாட்டில் உள்ளது.  மேலும் இங்கு வணிகர்கள் அதிகமாக கேமராக்களை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.கும்மராஜா அவர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் திரு.K.சரவணகுமரன் அம்மாபேட்டை சரகம், திரு.K.முருகேசன் அஸ்தம்பட்டி சரகம், திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம், சேலம் மாநகரம் ந

தமிழ்நாட்டில்சிறப்பாகசெயல்பட்ட 12ஊராட்சிகள்தேர்வுசெய்யப்பட்டு விருதுகள்வழங்கிய மத்திய அரசு முதலமைச்சர்மு.க ஸ்டாலின் பாராட்டினார்

Image
  அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றியங்களான விருதுகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும், குழந்தை

சசேலம்மாநகரகாவல்துறைகாவல்துறையில்கொலைகுற்றவாளிகளை கைதுசெய்த காவல்குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு.

Image
சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய குற்ற எண் 124/2020 ச/பி 147, 148, 302 இ.த.ச @ 147, 148, 120(b), 449, 302 இ.த.ச கொலை குற்ற வழக்கில்,  உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ரா மாவட்டம் சென்று, தலைமறைவு குற்றவாளிகளான 1.ரிஹான் குரேஷி 2.தினேஷ் ஆகியோர்களை கைது செய்த செயலைப் பாராட்டி, இரும்பாலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.J.ஜெய்சல்குமார், உதவி ஆய்வாளர் திரு.A.ராஜேந்திரன், தலைமை காவலர் 578 திரு.M.சுரேஷ்குமார், தலைமை காவலர் 544 திரு.M.வாசுதேவன், மு.நி.கா 228 திரு.R.ஜீவானந்தம், மு.நி.கா 448 திரு.T.மகேந்திரன், மு.நி.கா 355 V.கோவிந்தராஜ் மற்றும் சைபர் கிரைம், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.A.திருமூர்த்தி ஆகியோர்களுக்கு இன்று 12.05.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா இ.கா.ப., அவர்கள் மேற்படி சம்பவத்தை பாராட்டி சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினார்கள். சிறப்புநிருபர்.ஆசிப்முகமது.