திருநெல்வேலிமாவட்டம்முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பெரியபாறைஉருண்டுவிழுந்ததில் 3பேர்பலி மீதமுள்ளவர்களைமீட்கும்பணிதீவிரம் .

 

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு 14-05-22 நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் உள்பட 6 பேர் பள்ளத்தில் மாட்டிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்IPS விரைந்தார். அவர் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



மழை தூரல் இருப்பதாலும், சுமார் 300 அடி பள்ளம் என்பதாலும் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பின்னர் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது 6பேரில் 3உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன  இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கற்க்கள்தொடர்ந்து விழுந்துவருவதால் மீட்புபணிதாமதமாகிவருகிரது மாவட்ட ஆட்சியரும் மாவட்ட SP ஆகியோர் நேராகபார்வையிட்டு மீட்புபணியை துரிதபடுத்தினர்.

தலைமைநிருபர் S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.