மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி மற்றும் தொடர் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 50 பேரை மாவட்ட SP. Dr .L. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.


கடந்த 08.05.2022 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர். இந்த கராத்தே போட்டியில் தூத்துக்குடி ஜப்பான் கராத்தே டூ கென்யோ ரியோ தமிழ்நாடு கராத்தே பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.


அதேபோன்று கடந்த 27.02.2022 அன்று தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் நடத்திய 3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டில் வீர தமிழன் போர்க்கலை சிலம்பு கூடம் பயிற்சி மையம் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 50 மாணவ மாணவியர்கள்  (25.05.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவ மாணவியர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது மேற்படி பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் சுடலைமணி, பயிற்சியாளர்கள் வெள்ளைராஜா மற்றும் முத்து அருணா ஆகியோர் உடனிருந்தனர்.

நிருபர்.அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.