காவிரிடெல்டாபாசனத்திற்க்கு மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர்திறக்க இருப்பதால் தஞ்சையில் திட்டபணிகளை நீர்வளத்துறை தலைமைசெயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வுசெய்தார்.



 Additional secretary inspects Cauvery delta dredging works:                                                       காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப்பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் 22-05-22 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர் வாரும் பணிகள் ரூ.80 கோடி திட்டமதிப்பில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4,964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். அதனால் இப்பணிகளை ஜுன் 10-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து நீர் வரத்து அதிகரித்து 120 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது நீர் மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே, அதாவது மே 24-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலவெளி கிராமத்தில் கல்லணைக் கோட்டம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் முதலைமுத்துவாரி வடிகால் தூர்வாரும் பணியையும், களிமேடு கிராமத்தில் வெண்ணாறு கோட்டம் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் முதலைமுத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும், தென் பெரம்பூர் கிராமத்தில் வெண்ணாறு வடிநில கோட்டம் சார்பில் ரூ.4 லட்சம் செலவில் வெட்டிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியையும் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.இராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் (கல்லணைக் கால்வாய் கோட்டம்) அன்பரசன், செயற் பொறியாளர் பாண்டி, வெண்ணாறு வடிநில கோட்டம் செயற் பொறியாளர் மதன சுதாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிருபர்.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.