விழுப்புரம் மாவட்டம் திருடுபோன 10 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி கைது விழுப்புரம் காவல்துறையினர் அதிரடி


 விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் உட்கோட்டம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடந்த11.05.2022 அன்று அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் களவு போனதாக ரோசனை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருசக்கர வாகனம் தேடப்பட்டு வந்த நிலையில்

 கிடைத்த ரகசிய தகவலின் பேரில்உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா IPS., அவர்களின் தலைமையில் காவல்உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ், தமிழ்மணி சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அய்யப்பன், காவலர்கள் ஜனார்த்தனன், பூபாலன் மற்றும் செந்தில் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தேடியதில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் வினோத் வயது 21 என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் திண்டிவனம் அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் மேலும் 9 வாகனங்களும் திருடனிடம்இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.\மேற்கண்ட திருடனை கைது செய்துவழக்குபதிவுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. 

மேலும் திருடனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் விக்கிரவாண்டி மற்றும் செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்.ராமநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.