தஞ்சாவூர் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 3 டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், சிறுவன் உள்பட 6 பேர் கைது


 தஞ்சாவூர் மாவட்டத்தில் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 3 டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், சிறுவன் உள்பட 6 பேர் கைது. செய்துள்ளனர் தஞ்சாவூர் சரகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தஞ்சை காவல்சரக DIG கயல்விழி IPSஅவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ADSP. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்தவகையில் தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில்   தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சொகுசு காரை மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர்.அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், மேலும் எராளமான கஞ்சா மூட்டைகள் தஞ்சாவூர் மேலவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிருந்தாவனம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த குடோனில் ஆய்வு நடத்தியதில், சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மூன்று டன் போதைப் பொருட்களையும், சொகுசு காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பிரவீன் குமார்( 21) , தஞ்சாவூரை சேர்ந்த பக்காராம்( 48 ), முஹமத் பாருக் ( 35) , பன்னீர்செல்வம் (40), முத்துப்பேட்டையை சேர்ந்த சோழாராம் ( 41) மற்றும் 15 வயது சிறுவன் ஒருவன் உள்பட 6 பேரை கைது செய்து, அவர்களை தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் திருமதி.சந்திராஅவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். துரிதமாக செயல்பட்டு 3 டன் போதைப்பொருட்களை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு DIG கயல்விழி IPS அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

நிருபர்.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.