சென்னைஓமாந்தூரார்மருத்துவமனைவளாகத்தில் டெங்குஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் புகைதளிப்பான் வாகனத்தை துவக்கிவைத்துபேசிய அமைச்சர்கள்

 


 மருத்துவம்மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே .சேகர்பாபு அவர்கள் ஆகியோர் (16.5.22) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்பு தினத்தையொட்டி புகைத்தெளிப்பான் இயந்திரங்கள் பொருத்திய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, தேசிய டெங்கு தடுப்பு தின  உறுதிமொழியை ஏற்று , டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு, டெங்கு தடுப்பு பணியில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.   இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர்,                                            டாக்டர்.ஜெ. இராதாகிருஷ்ணன் IAS பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர். மணிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சிறப்புநிருபர்.GD.கமல்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.