தூத்துக்குடி மாவட்டம்குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள டாரஸ் லாரி திருட்டு - புகாரளித்த ½ மணி நேரத்தில் துரிதமாக லாரியை கண்டுபிடித்த போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட SP. Dr.L பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கபாண்டி (76) என்பவருக்கு சொந்தமான TN 92 C 9706 (Tata Prima) என்ற டாரஸ் லாரியை அதன் ஓட்டுநரான காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மகன் அப்பாஸ் (58) என்பவர்  (24.05.2022) மாலை 4.00 மணிக்கு குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி அனல்மின் நிலைய பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர்  (25.05.2022) காலை 09.00 மணிக்கு மேற்படி ஓட்டுநர் சென்று பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த லாரி காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லாரியின் உரிமையாளர் தங்கபாண்டி   அளித்த புகாரின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் லாரியில் இருந்த GPS கருவியின் மூலம் லாரி திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ரோடு பகுதியில் உள்ளதை அறிந்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு அலுவலக அதிகாரிகள்  திருநெல்வேலி நகர மற்றும் ஊரக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிமுருகன் மற்றும் திருநெல்வேலி ஊரக காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் சொர்ணகுமார் ஆகியோர் சீவலப்பேரி ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த மேற்படி காணாமல் போன லாரியை கண்டுபிடித்து மீட்டு குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி காணாமல்போன லாரியை புகாரளித்த ½ மணி நேரத்தில் கண்டுபிடித்து பறிமுதல் செய்த தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr. L. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார். மேலும் மேற்படி லாரியை திருடிய எதிரிகளை விரைந்து கைது செய்ய திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முனியாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நிருபர். அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.