உலக புகையிலை ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு சேலம்மாநகரில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு M.மாடசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்

 .

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று 31.05.2022 ம் தேதி சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கிளை கல்லூரியான அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் விழைப்புணர்வு ஊர்வலம் (Awareness Rally) நடத்தப்பட்டது. சேலம் சூரமங்கலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து AVR ரவுண்டானா வரை செல்ல புறப்பட்ட ஊர்வலத்தை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள் காலை 08.00 மணிக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் காவல் உதவி ஆணையாளர் திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டார்கள்.

சிறப்புநிருபர்.ஆசிப்முகம்மது

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.