திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 8 நாட்களும் மீட்பு பணியினை எவ்வித பிரதிபலன் எதிர்பாராமல் திறம்பட கையாண்ட பேரிடர் மீட்பு பணி முதன்மை பயிற்சியாளருக்கு நற்சான்றிதழ் வழங்கிமாவட்ட SP.P.சரவணன்IPS பாராட்டு.


திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான் குளம் குவாரி  விபத்தில் சிக்கிய 6 நபர்களை மீட்கும்  மீட்பு பணியில் ஈடுபட்ட  மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்க மத்திய தொழிற்படை பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேரிடர் மீட்பு முதன்மை பயிற்சியாளர் திரு.மரிய மைக்கில் அவர்களுக்கு, தகவல் கூறியதன் பேரில் அன்று  அதிகாலை  சம்பவம்‌  நடந்த இடத்திற்கு உடனே வந்து‌ சேர்ந்து  மாவட்ட எஸ்.பி  அவர்களுடன் மீட்பு பணி குறித்து ஆலோசனை செய்தார்.

இவரது ஆலோசனை படி குவாரியில் கயிறு மூலம் கீழே இறங்கி மீட்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு மீட்புப் பணியினர்  உள்ளே சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு அதில் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல்வேறு பட்ட இயற்கை இடையூறுகள் வந்தாலும் களத்தில் கடைசி வரை நிலைத்து நின்று தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் கடும் சிரமத்திற்கிடையே 4 பேர் உடல்கள் பத்திரமாக மேலே கொண்டு வருவதற்கு  உதவினார்.

திரு.மரிய மைக்கில் அவர்கள், பல்வேறு பேரிடர் நிகழ்வுகளில் சவாலான மீட்பு பணி மேற்கொண்டு பல உயிர்களை மீட்ட அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். உயரமான கட்டிடங்கள், மலைகளில் மீட்பு பணி குறித்து பல்வேறு துறையினருக்கு  பேரிடர் மீட்பு பயிற்சி அளித்தவர் ஆவார். இவர்  திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த  குவாரி விபத்தில்   மீட்புப் பணியில் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட காவல் துறையினருக்கும் மற்றும் பேரிடர் மீட்பு குழுவிற்கும்  பக்கபலமாய் இருந்து மீட்பு பணியினை சிறப்பாக செய்து முடிக்க‌ உதவினார்.

பேரிடர் மீட்புக்குழு முதன்மை பயிற்சியாளர் திரு.மரிய மைக்கில், அவர்களின், உன்னதமான பணியினை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் துறை சார்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPSஅவர்கள் பாராட்டி  நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.