சேலம்மாநகரகாவல் அம்மாபேட்டை காவல்பகுதியில் முக்கியசந்திப்புகளில் CCTV கேமராக்களைதுவக்கிவைத்து காவல்ஆணையர் நஜ்முல் ஹோதா IPS விழிப்பணர்வு உரை


. 13.05.2022-ம் தேதி சேலம் மாநகரம் C1 அம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர்தொட்டி பஸ் ஸ்டாப், பாலாஜி நகர், செங்கல்அணை ரோடு சந்திப்பு, மாருதிநகர், அதிகாரிப்பட்டி, குமரகிரிபேட்டை பஸ் ஸ்டாப் உள்பட 31 இடங்களில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு 126 அதிநவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.                                                                                                      


மேற்படி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது ஏற்கனவே அம்மாப்பேட்டை பகுதிகளில் 132 கேமராக்கள் துவக்கிவைத்து பயன்பாட்டில் உள்ளது. 



மேலும் இங்கு வணிகர்கள் அதிகமாக கேமராக்களை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.கும்மராஜா அவர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் திரு.K.சரவணகுமரன் அம்மாபேட்டை சரகம், திரு.K.முருகேசன் அஸ்தம்பட்டி சரகம், திரு.J.நாகராஜன் சூரமங்கலம் சரகம், சேலம் மாநகரம் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.T.சரவணன் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

SPL.Reporter.Asifmohemed.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.