திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் SP.P.சரவணன்IPS மருத்துவர்களுக்கு வேண்டுகோள்.


திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  14-05-22 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், IPS அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சுகாதார சேவை இணை இயக்குனர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் நிகழும் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்கள், அடிதடி வழக்குகளில்  காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும்,   புலன்விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான  காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  முக்கியமானதாக இருப்பதால் காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  உடனடியாக வழங்கும் பட்சத்தில்  வழக்குகளை  விரைந்து முடித்து வைக்கமுடியும் என்று தெரிவித்தார்.  காயச்சான்றுகளை காவல் துறையினருக்கு விரைந்து வழங்கும்படி‌ மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.