Posts

Showing posts from March, 2023

தமிழ்நாட்டில் முதன்முறையாக நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் (சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமரா அமைத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.

Image
  திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும்,  பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும்  இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேற்படி நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் அறிவுரையின்படி சூரிய சக்தியுடன்(சோலார்) இயங்க கூடிய  சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல்  ரோந்து வாகனங்களை  திருநெல்வேலி மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர்‌ அவர்கள் நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. P.சரவணன் IPS அவர்கள் கூறுகையில்  தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் தான்  நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களில் சூரிய சக்தியில்(சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி  கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும்  குற்ற சம்பவங்களையும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்க முடியும் எனவும், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும் என  தெரிவித்தார். அப்போது தனிப்பிரி

கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் ப‌குதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடிய மூவர் மீது வழக்கு பதிவு.

Image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் கிராம‌த்தில் தனியார் தோட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் V.குமரேசன் மற்றும் உதவி வன பாதுகாவலர் தலைமையில் பெரும்பள்ளம் வனச்சரகர் சிறப்பு குழு அமைக்க‌ப்ப‌ட்டு தனியார் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர், சோதனையில் காட்டெருமைகள், கடமான்கள்,காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது, இத‌னை தொட‌ர்ந்து வனவிலங்குகளின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது,மேலும் தனியார் தோட்ட வேலிபகுதியில் திருட்டுதனமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு வேலியில் பொருத்தி வனவிலங்குகள் வேட்டையாடபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,  இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளரான கொடைக்கானல் முன்னாள் ஒன்றிய குழு தலைவரான அப்துல்ரசாக், அவரது தந்தை முகமது அப்பாஸ் ஒலி,தோட்டத்தின் பணியாளர் பாலமுருகன் உள்ளிட்ட மூவர் மீது வன உயிர

கரூர் காவல்துறைசார்பாக பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் SP.சுந்தரவதனம் IPS மனுக்களைபெற்று விசாரணை

Image
  .கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. சுந்தரவதனம், IPS, அவர்கள் தலைமையில்  29.03.2023 காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம் (Petition Mela) தாந்தோணிமலையில் உள்ள VRS வேல் மஹாலில் நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நிலஅபகரிப்பு பிரிவு ஆய்வாளர், கணிணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில்  மட்டும் 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மனுதார் மற்றும் எதிரிமனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து ஓரே நாளில் 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டதுஎன்பதுகுறிப்பிடதக்கது.  மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. சுந்தரவதனம், IPS  அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக சாலை விபத்துக்களை தடுத்தல், விபத்து வாகனங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வழங்குதல் தொடர்பாக கரூ

தேனி மாவட்டகாவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை DGP. அவர்கள்

Image
  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர்                         DGP Dr.C. சைலேந்திரபாபு,IPS., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டத்தில் கடத்தல், கஞ்சா, திருட்டு மற்றும் சைபர்கிரைம் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு  விரைந்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினரின்  சீர்மிகு பணியை பாராட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் நற்சான்றிதழ், பண வெகுமதி வழங்கி, மேலும் சிறப்பாக பணி தொடர தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.    இதனைத்தொடர்ந்து திருட்டு வழக்கில் மீட்க்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தென் மண்டல காவல்துறை தலைவர் IG. திரு.அஸ்ராகார்க்,IPS, அவர்கள், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr..அபிநவ்குமார்,IPS அவர்கள்,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,IPS அவர்கள்,திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உடன் இருந்தனர். REPORTER.PARAMASIVAM.

கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Image
  அரியலூர் மாவட்டம்  கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம்  வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சங்கர் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரமோகன் அவர்கள் 27.03.2023பணிநிமித்தம் சென்ற போதுசாலையில் கீழே கிடந்த பையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 1/2 பவுன் தங்க நெக்லஸை தவறவிட்ட  அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  27.3.2023  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சங்கர் மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரமோகன் ஆகியோர்களின் மெச்சத் தகுந்த பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். நிருபர் ம.மகேஷ்

தூத்துக்குடி மாவட்டம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைபொருள் தடுப்புக்குழு SP.Dr.L.பாலாஜிசரவணன் துவக்கி வைத்து வழிப்பணர்வு உரை

Image
தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் Dr.L.. பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் மகளிர் கல்லூரியில்  போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து போதைப் பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து கொள்கின்றனர். அதன்பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இங்கு உருவாக்கப்பட்டுள்ள போதை பொ

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாணமாக சென்றதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த நேசமணி நகர் காவல் நிலையைத்தை சேர்ந்த பெண்  தலைமை காவலர் திருமதி. சரஸ்வதி அவர்கள் உடனடியாக சென்று புடவையை போர்த்தி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார்.  அவரது இந்த நற்செயலை பாராட்டும் வகையில்  22.03.2023  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N.ஹரிகிரண் பிரசாத் IPS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அந்த பெண் காவலரை நேரில் வரவழைத்து  அவரது சேவையை பாராட்டினார். REPORTER.JAYAVELMURUGAN.

கோவை மாவட்டம்விபத்துஏற்படுத்திவிட்டு நிற்க்காமல்சென்ற காரை 3மணிநேரத்தில் பிடித்த காவலர்களுக்கு SP.பத்ரிநாராயணன் IPS.பாராட்டு.

Image
   கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது   விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற நான்கு சக்கர வாகனத்தை  மூன்று மணி நேரத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  விபத்து ஏற்படுத்திய  வாகனத்தை கண்டுபிடித்து  கொடுத்த அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்  400 திரு.கருணாகரன், காவலர் 1613 திரு.கண்ணதாசன் மற்றும் 1860 திரு.குருசாமி  ஆகியோரை பாராட்டும் விதமாக  (23.03.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிருபர்.P.நடராஜ்.

சென்னை கல்லூரிமாணவியிடம் செயின்வழிபறி செய்தகொள்ளையன் 24 மணிநேரத்திற்க்குள்கைது வேப்பேரி ACP.G.ஹரிக குமார் காவல்குழுவினர் அதிரடி

Image
.சென்னை சூளை கல்லூரி மாணவியிடம் தங்கச் செயினை பறித்த வழிப்பறி கொள்ளையன். மாணவி P.ருத்ரவாணி கொடுத்த புகாரின் பேரில் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் மற்றும் காவல் குழுவினர் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்க்கொண்டு தீவிர புலன் விசாரணை செய்து. V.வினோத்.27,S/O.வரதராஜன் no.184,6.வதுதெரு,B.Block,SS.புரம்புரஸைவாக்கம்,சென்னை. என்ற வழிப்பறி கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் செயினை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திசிறையில்அடைத்தனர் செயின் வழிபரி சம்பந்தமாக புகார் கொடுத்ததின் பெயரில் கீழ்ப்பாக்கம் சரக காவல்துணை ஆணையர் திரு. கோபி அவர்களின் உத்தரவின் பேரில்  புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்குள் தீவிர புலன் விசாரணை செய்து வழிப்பறி கொள்ளையனை கைது செய்து செயினை கைப்பற்றிய காவல் உதவி ஆணையர் G. ஹரிகுமார் தலைமையிலான காவல் குழுவினரைசென்னைபெருநகரகாவல்ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் துணைஆணையர் திரு. கோபி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.  சிறப்பு நிருபர்.LNK.ச்சந தன் .

பன்முக கலைஞர்கள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பாக கலைஞர்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Image
 .  திருச்சி மாவட்டம் திருவரம்பூர் எறும்பீஸ்வரர் நகரில் நிறுவன தலைவர் நடிகர் வேல்முருகன் தலைமையில் பன்முக கலைஞர்கள் அறக்கட்டளை சார்பாக நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவினை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் அலி அகமத், செயலாளர் பழனி முருகன், பொருளாளர் நடிகர் பாலமுருகன், இணைச் செயலாளர் பாரதி, துணை ஒருங்கிணைப்பாளர் சுபேருதீன், அமைப்பாளர் ரமேஷ், துணை ஆலோசகர் துணை அமைப்பாளர் தாமரைச்செல்வன், மக்கள் தொடர்பாளர் ஹரிஹரன், சட்ட ஆலோசகர் அகிலன், துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் ஐயப்பன், மாவட்ட துணை தலைவர் அன்வருதீன், துணைச் செயலாளர் சித்தி சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ். பி. பாபு, போலீஸ் பார்வை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர். என். பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஏரோ ஸ்கே டோபால் அசோசியேஷன் தலைவர் நா. ராகேஷ் சுப்ரமணியன் செயலாளர் பிரவீன் ஜான்சன். மற்றும் ஒரு அறக்கட்டளை ஏ கே டி பாண்டியன், பா

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.

Image
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள  தொழில் நிறுவனங்கள், கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப‌ நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிப்படையாமல் இருக்க அவர்களுக்கு சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறை சார்பாக சைபர் கிரைம் கருத்தரங்கு கூட்டம்  பாளையங்கோட்டை  செல்வி மஹாலில் வைத்து நடைபெற்றது. இக்கருத்தரங்கு  கூட்டம்  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள்., தலைமையில்   நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் திரு.சரவணகுமார், அவர்கள் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கு கூட்டத்தில் திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள வங்கி, கல்லூரி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்  மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள்சார்ந்த வர்கள் பங்கு பெற்றனர். அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பாதுகாக்க முக்கிய

தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையேயான 62வது தடகள போட்டி.வற்றியாளர்களுக்குIG.G.கார்த்திகேயன்IPS.பாராட்டு

Image
  திருச்சிமாவட்டம் கவல்துறைமண்டலங்களுக் கான 62, வது தடகளப்போட்டியில் மிதிவண்டி ஓட்டும் போட்டி மற்றும் KHOKHO விளையாட்டு போட்டிகள்  திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 2023 மார்ச் 3 முதல் 5 வரை மூன்று  நாள்கள் நடைபெற்றது.  இப்போட்டியில் மொத்தம் ஒன்பது மண்டலங்களின் அணிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை அணியானது தடகள போட்டியில்  6  தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கங்களையும், மேலும் பெண்களுக்கான  சைக்கிள் ஓட்டுதல் போட்டியில்  3  தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களையும் மற்றும் KHOKHO விளையாட்டு போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் அணியானது வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்,  வெற்றி பெற்ற காவலர்களைத் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் IG.திரு. G.கார்த்திகேயன் IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்கள். உடன் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.சரவண சுந்தர் IPS அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP. திரு. சுஜித்குமார் IPS அவர்கள் உடன் இருத்தனர் . சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.

சேலம்மாநகரில் காவல ல்துறையினருக்கு மனஅழுத்தமின்றிபணியாற்ற பயிற்சிமுகாம் காவல்ஆணையர் விஜரகுர IPS துவக்கிவைத்தார்

Image
15.03.23 –ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சேலம் லைன்மேடு, காவலர் சமுதாய கூடத்தில் “சேலம் மாநகர காவலர் மருத்துவமனை” மற்றும் “மாவட்ட மனநல அமைப்பு” இணைந்து நடத்திய காவல் அலுவலர் மற்றும் காவல் ஆளிநர் நலன் நிமித்தம் “Stress Management Programme for Police Officers” எனும் ஒருநாள் பயிற்சி நிகழ்வினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி IPS அவர்கள் குத்துவிளக்கேற்றி இனிதே துவக்கி வைத்தார்.    இதில் சேலம்  மருத்துவர்கள் காவல் அலுவலர்கள் பலன் பெறும் வகையில் மனநோய் மேலாண்மை குறித்து பயனுள்ள பயிற்சி அளித்தனர். தலைமைநிருபர்.ஜெகதீஷ்.

கோவை மாவட்டம்காவல்துறை வடமாநிலதொழிலாளர்கள்பற்றி வதந்திபரவியால்பதட்டம் பாதுகாப்புவிழிப்புணர்வு ஏற்படுத்திய SP.பத்ரிநாராயணன் IPS.

Image
  தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பரவிய வதந்தியால் வடமாநில தொழிலாளர்கள் பதட்டமானதையொட்டி அவர்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும்  காவல்துறை DGP உத்தரவின்பேரில் காவல்துறைசார்பாக நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்களது உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்ளை மாவட்ட காவல்துறையினர் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPSஅவர்கள் துடியலூர் பகுதியில்  வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடி  மன தைரியம் ஏற்படுத்தியதுடன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு விளக்கி கூறி தெளிவுபடுத்தினார்.  காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய நடவடிக்கை வடமாநிலத் தொழிலாளர்கள்  இடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவர்களிட

சோழன் புக்உலகசாதனையாளர்கள் அமைப்பின்சார்பாக மாணவமாணவிகளுக்கு விளையாட்டுபோட்டி வெற்றியாளர்களுக்குபரிசுகள்வழங்கிய DSP.அறிவழகன்.

Image
   திருச்சிமாவட்டம் 5/3/2023 ஞாயிற்றுக்கிழமை பாரத மிகுமின் வளாகத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் தமிழ் வழி கல்வி பயிலும்  பள்ளியில்  சோழன் வேல்டு புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் பதஞ்சலி ஸ்போர்ட்ஸ் கிளப்  இணைந்துபாரத மிகுமின் ஊழியர்களின் குழந்தைகளுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி மிக விமர்சையாக நடத்தினர் . சோழன் வேல்டு புக் ஆஃ ப்ரெக்கார்டு நிறுவனர் திரு. நிமலன் நீலமேகம் மற்றும்   திருச்சி மாவட்ட தலைவர் திரு. செல்வராஜ் இப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தினர் .  இப்போட்டியில் 300க்கும் அதிகமான வீரர்கள் வீராங்கனைகள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர் . திருவெரம்பூர்  துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அறிவழகன் சிறப்பு விருந்தினர் ஆகவும் தமிழ்நாடு எரோஸ் கேட்டோபால்சங்கத் தலைவர் திரு. ராக்கேஷ் சுப்பிரமணியன் கௌரவ விருந்தினராக இவ்விழாவில் பங்குகொண்டு  வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி , வருகை தந்திருக்கும் அனைவரிடமும் விழிப்புணர்வு உரையாற்றி இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் . நிருபர்.திவாகர்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக வடமாநில தொழிலாளர்களுக்குபாதுகாப்பு வழிப்புணர் முகாம்நிகழ்ச்சி.

Image
காவல்துறை தலைமை இயக்குனர் DGP.Dr.C. சைலேந்திரபாபு IPS.,  அவர்களின் ஆணைக்கிணங்கவடக்கு மண்டல காவல்துறை தலைவர் IG.Dr. கண்ணன் IPS.,  அவர்களின் உத்தரவின் பேரில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. Dr. ஸ்ரீநாதா IPS.,  அவர்களின் அறிவுறுத்துதலின்பேரில்   விழுப்புரம்மாவட்டத்தில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு  விழுப்புரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவும் போலியான காணொளிகளை நம்பி எவ்வித அச்சுறுத்துதலுக்கும் பயப்பட வேண்டாம் எனவும். தங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம் என உறுதி அளித்தும் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள காவல் நிலைய எண்களை கொடுத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. தொலை பேசி எண்: 94981-00485காவல் கட்டுபாட்டு அறை எண்: 94981-81229 / 100. நிருபர்.ராமநாதன்.

பேருந்தில் கண்டெடுத்ததங்கநகையை காவல்துறையில்ஒப்படைத்த லூக்காஸ்

Image
  விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த  லூகாஸ் வயது 45, என்பவர் பேருந்தை சுத்தம் செய்யும்போதுகண்டெடுத்த  1,சவரன் தங்க நகையை நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் உடன்  துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ஆரோக்கியராஜ் அவர்களிடம் ஒப்படைத்தார்.  இது குறித்து  விசாரணை மேற்கொண்டதில் தங்க செயினை  தொலைத்தவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் வயது 43, என்பவர் எனவிசாரணையில் தெரிந்ததால் அவரை வரவழைத்து  தங்க செயினை அவர்களிடம் எடுத்து கொடுத்த லூகாஸ் அவர்களால்  ஒப்படைக்கப்பட்டது. லூகாஸ் அவர்களின் நேர்மையைகண்டு காவல்துறையினர் பாராட்டினார்கள்.சிறமப்பு நிருபர்.P.முத்துகுமரன்

கொடைக்கானல் மேல் மலை கூக்கால் ம‌லைக்கிராம‌ப்பகுதியில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இரண்டு இளைஞர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்ற‌விய‌ல் ந‌டுவ‌ர் நீதிம‌ன்ற‌ நீதிப‌திகார்த்திக் தீர்ப்பு.

Image
  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராம‌ பகுதியினை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மன்னவனூர்கிராம‌ பகுதியைச் சேர்ந்த ஜீவா 22, ம‌ற்றும்  பூண்டி கிராம‌ப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 26 ,இருவரும் தொடர்ந்து அவ்வப்போது கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது, சம்பவ தினமான  ஞாயிற்றுக்கிழமை அன்று இளம்பெண் தனது வாகனத்தில் மாலை நேரத்தில் கொடைக்கானல் சென்று விட்டு  கூக்காலில் உள்ள தனது தோட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக‌ கூற‌ப்ப‌டுகின்ற‌து,   அப்போது ஜீவாவும், பாலமுருகனும் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் மது அருந்திவிட்டு இள‌ம்பெண் வ‌ருகைக்காக‌ காத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது,  இளம்பெண் பூம்பாறை பகுதியினை கடந்ததை கண்ட இருவரும் இளம்பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த நிலையில் கூக்கால் பிரிவு அருகே இளம்பெண்ணின் வாகனம் சென்ற பொழுது வாகனத்தை மறித்து வாகனத்தில் ஏறி இரண்டு இளைஞர்களும் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர், இதில் அந்த இளம் பெண்ணின் கூச்சல்  சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். இதில் பாலமுருகன் மட்டும் சிக்கிக்கொண்டார், ஜ

தேவகோட்டைநகரத்தை குற்ற்மில்லா நகரமாக்கமுனைப்புடன் செயலாற்றிவரும் காவல்ஆய்வாளர் சரவணன் வணிகசங்கம் -பொதுமக்கள்பாராட்டு

Image
 .  சிவகங்கைமாவட்டம்தேவகோட்டை நகரில் காவல் ஆய்வாளராகதிரு.சரவணன்பொறுப்பேற்ற பின்பு நகரில் சட்டம் ஒழுங்குசிறப்பாக பராமரிக்கப்பட்டுவருகிறது.நகரில் அடிதடி கட்டப்பஞ்சாயத்துரவுடித்தனம் சட்ட விரோத மது விற்பனைபோதைப்பொருள் விற்பனை கஞ்சாவிற்பனை சீட்டாட்டம் ஆகியவை முற்றிலும்கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேவகோட்டை நகரில் போதை பொருள்விற்பனை செய்தமைக்காக சிவகங்கைமாவட்டத்திலேயே தேவகோட்டை நகர் காவல்நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 187வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் அருகில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீதுகடுமையான நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.  நகரில் மண் மணல் கடத்தல் முற்றிலும்தடுக்கப்பட்டுள்ளது.நகரில் கஞ்சா விற்பனை செய்தவர்களின்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.  மக்கள்அச்சமின்றி எளிதில் காவல் நிலையத்தைஅணுகும் வகையில் காவல் நிலையத்தில்அணுகுமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டது .நகர காவல் நிலையத்தில் கொடுக்கப்படும்புகார்களுக்கு யாருடைய சிபாரிசும்தேவையில்லை என்ற நிலையில் தக்கநடவடிக்கைமேற்க்கொள்ளுமுறைஉருவாக்கப்பட்டுள்ளது.

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Image
திருச்சியில் இயல் இசை நாடக கலைகளில் நலிந்த கலைஞர்களின் நலன் கருதி துவங்கப்பட்டுள்ள,  பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா, நிர்வாக குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஏற்பாட்டில், பொருளாளர் பாலமுருகன், செயலாளர் பழனி முருகன், இணைச்செயலாளர் பாரதி, துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்  டாக்டர் பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு ஏரோஸ்கட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து வடக்கன் A மாற்றம் என்ற விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டனர். அப்போது கீரைதீன் தயாரிப்பில், இயக்குனர் வேல்முருகன் இயக்கத்தில், திருச்சி என்டர்டைன்மென்ட் குரூப்ஸ் சினிமா வழங்கும்  வடக்கன் A ஏமாற்றம் விழிப்புணர்வு குறும்படத்தை பற்றி சிறப்பு விருந்தினர்கள் கூறுகையில், இந்தக் குறும்படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம், அதாவது மொழியினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது