கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

அரியலூர் மாவட்டம்  கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம்  வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சங்கர் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரமோகன் அவர்கள் 27.03.2023பணிநிமித்தம் சென்ற போதுசாலையில் கீழே கிடந்த பையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 1/2 பவுன் தங்க நெக்லஸை தவறவிட்ட  அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்  27.3.2023  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சங்கர் மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரமோகன் ஆகியோர்களின் மெச்சத் தகுந்த பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

நிருபர் ம.மகேஷ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.