தமிழ்நாட்டில் முதன்முறையாக நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் (சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமரா அமைத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.

 

திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும்,  பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும்  இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

மேற்படி நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் அறிவுரையின்படி சூரிய சக்தியுடன்(சோலார்) இயங்க கூடிய  சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல்  ரோந்து வாகனங்களை  திருநெல்வேலி மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர்‌ அவர்கள் நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. P.சரவணன் IPS அவர்கள் கூறுகையில்  தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் தான்  நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களில் சூரிய சக்தியில்(சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி  கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும்  குற்ற சம்பவங்களையும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்க முடியும் எனவும், முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும் என  தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.ராஜேஷ், தொழிற்நுட்ப பிரிவு ஆய்வாளர் திரு. கிருஷ்ணசாமி, உதவி ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உடனிருந்தனர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.