கொடைக்கானல் மேல் மலை கூக்கால் ம‌லைக்கிராம‌ப்பகுதியில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இரண்டு இளைஞர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்ற‌விய‌ல் ந‌டுவ‌ர் நீதிம‌ன்ற‌ நீதிப‌திகார்த்திக் தீர்ப்பு.

 

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராம‌ பகுதியினை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மன்னவனூர்கிராம‌ பகுதியைச் சேர்ந்த ஜீவா 22, ம‌ற்றும்  பூண்டி கிராம‌ப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 26 ,இருவரும் தொடர்ந்து அவ்வப்போது கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது, சம்பவ தினமான  ஞாயிற்றுக்கிழமை அன்று இளம்பெண் தனது வாகனத்தில் மாலை நேரத்தில் கொடைக்கானல் சென்று விட்டு  கூக்காலில் உள்ள தனது தோட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக‌ கூற‌ப்ப‌டுகின்ற‌து,  

அப்போது ஜீவாவும், பாலமுருகனும் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் மது அருந்திவிட்டு இள‌ம்பெண் வ‌ருகைக்காக‌ காத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது,  இளம்பெண் பூம்பாறை பகுதியினை கடந்ததை கண்ட இருவரும் இளம்பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த நிலையில் கூக்கால் பிரிவு அருகே இளம்பெண்ணின் வாகனம் சென்ற பொழுது வாகனத்தை மறித்து வாகனத்தில் ஏறி இரண்டு இளைஞர்களும் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர், இதில் அந்த இளம் பெண்ணின் கூச்சல்  சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். இதில் பாலமுருகன் மட்டும் சிக்கிக்கொண்டார், ஜீவா தப்பி ஓடிவிட்டார்,

 

இத‌னை தொட‌ர்ந்து  இதுபற்றி அந்த இளம் பெண் கொடைக்கானல் காவ‌ல் நிலைய‌த்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவ‌ல்துறையின‌ர் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தப்பி ஓடிய ஜீவாவையும் காவல்ஆய்வாளர் திரு.பாஸ்டின்தினகரன் தலைமையிலான காவல்குழுவினர் கைது செய்தனர். பின்னர் கொடைக்கானல் நீதிம‌ன்ற‌த்தில் ஆஜ‌ர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த கொடைக்கானல் குற்ற‌விய‌ல் ந‌டுவ‌ர் நீதிபதி திரு.கார்த்திக் அவர்கள் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஜீவா மற்றும் பாலமுருகன் இருவருக்கும் தலா 7, ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் ,20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

 


பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க தண்டனை கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறையும் என்ற நோக்குடன் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும், போலீசாரின் செயல்பாட்டை பாராட்டியும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.