கரூர் காவல்துறைசார்பாக பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் SP.சுந்தரவதனம் IPS மனுக்களைபெற்று விசாரணை

 

.கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. சுந்தரவதனம், IPS, அவர்கள் தலைமையில்  29.03.2023 காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம் (Petition Mela) தாந்தோணிமலையில் உள்ள VRS வேல் மஹாலில் நடைபெற்றது.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நிலஅபகரிப்பு பிரிவு ஆய்வாளர், கணிணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில்  மட்டும் 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மனுதார் மற்றும் எதிரிமனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து ஓரே நாளில் 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டதுஎன்பதுகுறிப்பிடதக்கது. 

மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. சுந்தரவதனம், IPS  அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக சாலை விபத்துக்களை தடுத்தல், விபத்து வாகனங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வழங்குதல் தொடர்பாக கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கரூர் நகரம், கரூர் ஊரகம், குளித்தலை உட்கோட்டங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு, ஆய்வாளர்கள், நில அபகரிப்பு பிரிவு, கணிணி குற்றப்பிரிவு (Cyber Crime) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்புநிருபர்.முகம்மதுஹுஸேன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.