கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் ப‌குதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடிய மூவர் மீது வழக்கு பதிவு.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் கிராம‌த்தில் தனியார் தோட்டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது, இதன் அடிப்படையில் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் V.குமரேசன் மற்றும் உதவி வன பாதுகாவலர் தலைமையில் பெரும்பள்ளம் வனச்சரகர் சிறப்பு குழு அமைக்க‌ப்ப‌ட்டு தனியார் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர், சோதனையில் காட்டெருமைகள், கடமான்கள்,காட்டுப்பன்றி,


முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது, இத‌னை தொட‌ர்ந்து வனவிலங்குகளின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது,மேலும் தனியார் தோட்ட வேலிபகுதியில் திருட்டுதனமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு வேலியில் பொருத்தி வனவிலங்குகள் வேட்டையாடபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, 

இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளரான கொடைக்கானல் முன்னாள் ஒன்றிய குழு தலைவரான அப்துல்ரசாக், அவரது தந்தை முகமது அப்பாஸ் ஒலி,தோட்டத்தின் பணியாளர் பாலமுருகன் உள்ளிட்ட மூவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வ‌ன‌த்துறையின‌ர் வழக்கு பதிவு செய்துள்ளனர், 

மேலும் இந்த மூவரும் தலைமறைவாகியுள்ளதால் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்ற‌ன‌ர், இது போன்ற செயல்களில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் வ‌ன‌த்துறையின‌ர் இந்த‌ப்ப‌குதிக‌ளில் உள்ள‌ தோட்ட‌ங்க‌ளில் ஆய்வு செய்து வ‌ருவ‌துட‌ன் விசாரணையும் மேற்கொண்டு வருகின்ற‌ன‌ர், செம்பிரான் குளத்தில் வனவிலங்குகளின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்டது இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

நிருபர்.R.குப்புசாமி

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.