கோவை மாவட்டம்காவல்துறை வடமாநிலதொழிலாளர்கள்பற்றி வதந்திபரவியால்பதட்டம் பாதுகாப்புவிழிப்புணர்வு ஏற்படுத்திய SP.பத்ரிநாராயணன் IPS.

 

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பரவிய வதந்தியால் வடமாநில தொழிலாளர்கள் பதட்டமானதையொட்டி அவர்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும்  காவல்துறை DGP உத்தரவின்பேரில் காவல்துறைசார்பாக நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



 இதன் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்களது உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வட மாநில தொழிலாளர்ளை மாவட்ட காவல்துறையினர் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPSஅவர்கள் துடியலூர் பகுதியில்  வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடி  மன தைரியம் ஏற்படுத்தியதுடன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு விளக்கி கூறி தெளிவுபடுத்தினார். 

காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய நடவடிக்கை வடமாநிலத் தொழிலாளர்கள்  இடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் அவர்களிடம் மன  தைரியமும் ஏற்பட்டது.

மேலும் வடமாநில தொழிலாளர்கள், அவர்களது பிரச்சனையை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஹிந்தி மொழி பேசத் தெரிந்த காவலர்கள் 24×7 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் புகார் தெரிவிக்க மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, 77081-00100, 0422-2302732 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.என்றுகோவைமாவட்டகாவல்துறைதெரிவித்துள்ளது.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.